09 August 2015

மாங்காய் ஊறுகாய்

அனைவருக்கும் காலை  வணக்கங்கள் ....

நான்  முதன் முதலாக செய்த மாங்காய் உறுகாய்   ... பொதுவாக  சமையல் வல்லுனர்களின் செய்முறையை பார்த்து இருப்பிர்கள்... இது அம்மாவின் செய்முறை....மிகவும்  சுலபமான  எளிய முறை ....




தேவையானவை

மாங்காய்  - 1

வறுத்து  பொடிக்க -

கடுகு  - 1 ஸ்பூன்
வெந்தயம்  - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 15

கல் உப்பு   -தே அளவு
எண்ணெய்   - 5 ஸ்பூன்

செய்முறை

முதலில்  மாங்காயை நன்றாக கழுவி சிறிது  பெரிய பெரிய  துண்டுகளாக  நறுக்கி உப்பில் சில நாட்களுக்கு  ஊர விட  வேண்டும் ...பிறகு...

வறுத்து  பொடிக்க வேண்டியவைகளை   பொடிக்கவும்....

பின் கடாயில் எண்ணெய் உற்றி ....பெருங்காயம்  போட்டு தாளித்து பின் மாங்காய் ஊறிய உப்பு நீரை மட்டும்  ஊற்றவும் அந்த நீர் வற்றியவுடன்
பொடித்த தூளை போட்டு ... பின் மாங்காயையும் சேர்த்து வதக்க சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி...







அன்புடன் 
அனுபிரேம் 



Image result for kalam words in tamil

3 comments:

  1. இதே முறையில்தான் எங்கள் வீட்டிலும்...உப்புத் தண்ணீரைக் கொதிக்கவிட்டு....அருமை பல நாட்களுக்குப் பிறகு ஊறுகாய் நினைவுக்கு வந்தது...நன்றி

    ReplyDelete
  2. உப்பு நீர் ஐடியா நல்லாருக்கு. காய் கிடைக்கட்டும், செய்கிறேன். நன்றி அனு.

    ReplyDelete
  3. அட.. இப்படும் செய்யலாமோ!
    அருமையான ஐடியா! நானும் செய்து பார்த்துவிடுகிறேன் தோழி!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete