23 December 2014

முக்கொம்பு --சுற்றுலா

முக்கொம்பு..


இந்த  முறை  விடுமுறைக்கு திருச்சிக்கு சென்ற போது  முக்கொம்பு  சென்றோம்.திருச்சியின் சுற்றுலா  தளங்களில் முக்கொம்பு  மிகவும் முக்கியமானது.நாங்கள் குணசீலம் சென்று விட்டு திரும்பி வரும் போது முக்கொம்பு சென்றோம்.
என்னுடைய பள்ளி நாட்களில் அனைவரும் முக்கொம்புவிற்கு சுற்றுலா  செல்வார்கள்.........பள்ளியிலிருந்தோ அல்லது வீட்டிலிருந்தோ...........நாங்களும் பலமுறை சென்று இருக்கிறோம்..ஆனால் குழந்தைகளுடன் சென்றது இதுவே முதல் முறை...மிகவும் சிறப்பாக இருந்தது...பார்க்கையும் நன்றாக பராமரிக்கின்றனர்...குழந்தைகள் விளையாட வித்தியாசமான பல சருக்குகள் , ஊஞ்சள் என அருமையாக இருந்தது.............

அங்கு எடுத்த அழகான புகை படங்கள் இவை  ....


        


முக்கொம்புப்  பற்றி


                      காவிரி ஆற்றின் குறுக்கே திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67-ல் திருச்சியில் இருந்து 15 மைல்கல் தொலைவில் அமையபெற்றுள்ளது .திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம்.


       இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. காவிரியின் ஒரு புறம் முக்கொம்பும் மறுபுறம் வாத்தலையும் உள்ளன.


இது 19-ம் நூற்றாண்டில் திரு.அர்த்தூர் காட்டன் என்பவரால் கட்டப்பட்டது.இந்த அணை 683 மீட்டர் நீளமுடையது .அணையுடன் சேர்ந்து பூங்காவும் உள்ளது.




































முக்கொம்பு படங்கள் மேலும்  தொடரும் .....

முக்கொம்பு --சுற்றுலா 2


அன்புடன்
அனுபிரேம்



10 comments:

  1. மிக அழகான இடம் .அதை அழகா படம் எடுத்திருக்கிறீங்க. பொன் மொழியும் அருமை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி பிரியசகி ...

      Delete
  2. உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்மஸ் ,புதுவருட வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete
  3. தகவல்களும் படங்களும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஐயா

      Delete
  4. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (30/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவர்க்கும் மிகவும் நன்றி ...

      Delete
  5. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். எனக்கு முன்னர் புதுவைவேலு அந்த இனிய செய்தியைத் தெரிவித்ததறிந்து மகிழ்ச்சி. தங்களது களம் கண்டேன். வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete