வணக்கம் .....வாழ்த்துக்களுடன் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
இந்த முறை கோடை விடுமுறையில் நாங்கள் பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்காவிற்க்கு சென்றோம். நல்ல சுற்றுலா தளம் குழந்தைகளுடன் சென்று ரசிக்க வேண்டிய இடம்
....
பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா (இணையத்தில் இருந்து )--
இது பெங்களூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூர் காட்டுப் பகுதியின் கீழ் வரும் பன்னேர்கட்டா பூங்கா 104 சதுர கிலோமீட்டர் பரப்பில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இது பாதுகாக்கப்பட்ட பத்து காடுகளில் ஒன்றாகாவும் இருந்து வருகிறது.
1971-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த பூங்காவில் மிருகக்காட்சி சாலை, குழந்தைகள் பூங்கா, மீன்கள் காட்சியகம், முதலை பூங்கா, அருங்காட்சியகம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, பாம்பு பண்ணை முதலியவைகளோடு வளர்ப்பு பிராணிகளுக்கான தனி இடமும் இருக்கிறது.
பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா, புலி மற்றும் சிங்கங்களுக்காக பிரபலமானது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பூங்காக்காளில் சிங்கங்களுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வரும் பூங்காக்களில் பன்னேர்கட்டா ஒன்று.
இங்கு வனத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் சவாரி செய்து புலி, சிங்கங்களோடு நாம் மற்ற விலங்குகளையும் பார்த்து ரசிக்கலாம்.
முதலில் நாங்கள் சபாரி சென்றோம் .....கம்பி போட்ட வேன்களில் நாங்கள் செல்ல மிருகங்கள் எங்களை பார்த்தன... மன்னிக்கவும் நாங்கள் தான் அவைகளை கண்டோம் ... அவைகள் தினமும் எங்களை போல் பல பேரை காண்பதால் அலட்டவே இல்லை ... அதிலிலும் சிங்கள் மிகவும் ரம்மியமான உறக்கத்தில் இருந்தன...
இப்ப வாங்க எங்க சபாரி புகைபடங்களை காணலாம்
|
யானை குடும்பம் |
|
கரடியார் |
|
சிங்க ராஜா தூக்கத்தில் |
|
புலியார் |
தொடரும் .....
பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா -2
பெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா -3
அன்புடன்
அனுபிரேம்
அனு,
ReplyDeleteசும்மா படத்தில் புலியைப் பார்க்கும்போதே வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
மீண்டும் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
வருகைக்கு மிகவும் நன்றி சித்ரா .....
ReplyDeleteNice trip & good photography😊
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமை. யானைகுடும்பம் அழகு. வெள்ளைப்புலியா அது??. புலியைப்பார்த்தாலே மனம் கிலி கொள்கிறது. முக்கியமானவர்களை படம் பிடித்திருக்கிறீங்க.பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteரொம்ப சரி ...வெள்ளை புலியே ....இந்த படங்கள் எல்லாம் என் அண்ணி எடுத்தது ...வருகைக்கு மிகவும் நன்றி தோழி ....
ReplyDeleteநாங்கள் நிறைய தடவை சென்றிருக்கின்றோம்....அருமையாக இருக்கும்...தங்களது புகைப்படங்கள் அருமை!
ReplyDeleteஅருமையான படங்கள்.
ReplyDelete