07 September 2015

திருவெள்ளறை 3

திருவெள்ளறை  3


இது வரை திருவெள்ளறை ஸ்தலத்தின் வரலாறு மற்றும்  சிறப்புகளை தரிசித்தோம் ...


இப்பொழுது இங்கு பெரியாழ்வார் நந்தவனம் அமைக்கும் பணி நடை பெறுகின்றது அந்த படங்கள் உங்களுக்காக....ஆயிரத்திர்க்கும்  அதிகமான செடிகள்  நட இருப்பதாக அங்கு உள்ளவர்கள் கூறினார்கள் ....


பொதுவாக இக்கோவிலின் வெளி பகுதி மிகவும் காடாக காட்சி அளிக்கும் ....ஆனால் இந்தமுறை மிகவும் சிறப்பாகவும் , அழகாகவும்  இருந்தது ....



கிணறு 







வெள்ளை  பாறை 


மிக  பெரிய  மதில் சுவர் 



கீர்த்தியும் ,பிரசன்னாவும் 

  நாதமுனிகளின் பிரதம சீடரான உய்யக்கொண்டான் மற்றும் எங்களாழ்வான் ஆகியோரின் அவதாரத்தலம் இது. 

உடையவர் ஸ்ரீராமானுஜர் இங்கு சிறிது காலம் வாழ்ந்து வைணவத்தை வளர்த்திருக்கிறார். 

மணவாளமாமுனிகளும், வேதாந்த தேசிகரும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இத்தலத்தைப் பற்றி பாடியிருக்கின்றனர்.








வென்றிமாமழுவேந்தி முன்மண்மிசைமன்னரை* மூவெழுகால்கொன்றதேவ*
நின்குரைகழல் தொழுவதோர்வகை* எனக்கருள்புரியே*
மன்றில்மாம்பொழில் நுழைதந்து* மல்லிகைமௌவலின் போதலர்த்தி*
தென்றல்மாமணம் கமழ்தரவரு* திருவெள்ளறை நின்றானே (5.3.1)




பரசுராமனாக, கையில் மழு ஏந்தி, பூவுகில் இருபத்தோரு தலைமுறை அரசர்களை அழித்தவனே ! மல்லிகைப் பந்தல் வழி வரும் தென்றலானது, வானுயர்ந்த சோலைகளில் நுழைந்து, தான் ஏந்தி வந்த நறுமணத்தை எங்கும் கமழச்செய்யும் திருவெள்ளறையில் கோயில் கொண்டவனே ! ஒளி மிக்க தாமரையத்த உன் திருவடிகளை என்றும் பற்றிட வழிமுறை ஒன்று எனக்கருள்வாயாக !



-திருமங்கையாழ்வார்






அன்புடன் 
அனுபிரேம் 



Image result for tamil quotes




No comments:

Post a Comment