ஆசியாவிலேயே பெரிய கோபுரமும் இந்தியாவிலேயே மிக பெரிய ஆலயமுமான ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோவில் '' மஹாசம்ப்ரோசணம் '' - 18.11.15 அன்று நடைப்பெற்றது ... அந்த படங்கள் இன்று உங்களுக்காக ....
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்து கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி என்பதால் தமிழக அரசு இக்கோவில் திருப்பணிகளை தொடங்க திட்டமிட்டு அதற்கான கால்கோள்விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி நடந்தது.
ரூ10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பணிகள், நன்கொடையாளர்கள் ஒத்துழைப்போடு ரூ30 கோடிக்கும் மேலான மதிப்பில் இரவு பகலாக நடந்தது. இதில் பிரதான சன்னதிகள் தவிர மற்ற சன்னதி திருப்பணிகள் முதலில் நிறைவுபெற்றது. இதை தொடர்ந்து திருப்பணிகள் நிறைவடைந்த 11 கோபுரங்கள் மற்றும் 43 உப சன்னதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி மகா சம்ப்ரோஷ்ணம் நடந்தது.
பிரதான சன்னதிகளான ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார், சக்கரத்தாழ்வார், பெரியகருடன் மற்றும் ராமானுஜர் சன்னதிகளுக்கான திருப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இந்த சன்னதிகளுக்கும் மீதமுள்ள 10 கோபுரங்களுக்கும் மகா சம்ப்ரோஷ்ணம் 18 ம் தேதி நடைபெற்றது.
இங்கு உள்ள அனைத்து படங்களும் இணையத்தில் இருந்து கிடைத்தவை பதிவு செய்த பக்தருக்கு மிகவும் நன்றி ....
ஓம் நமோ நாராயணாய நமக :
ஓம் நமோ நாராயணாய நமக :
ஓம் நமோ நாராயணாய நமக :
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம்பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.
-தொண்டரடிப் பொடியாழ்வார்
அன்புடன்
அனுபிரேம்
எங்களுக்கும் அவ்விணையப்படங்களை நீங்கள் பகிர்ந்ததால் நானும் பார்க்கக்கூடியதாக இருந்தது.அழகாக,தெளிவாக இருக்கு படங்கள். ரெம்பநன்றிகள் அனு.
ReplyDelete