31 December 2015
29 December 2015
உடுப்பி கிருஷ்ணர் கோயில் 2
உடுப்பி கிருஷ்ணர் கோயிலின் மூலவர் பற்றி முந்தைய பதிவில் பகிர்ந்தேன் ..இன்று உடுப்பி கிருஷ்ணரின் மற்ற சிறப்புகளை காணலாம்
![]() |
கோவில் குளம் |
கன்னட பக்தர் கனகதாசர் ஒரு முறை பெருமாளை தரிசிக்க உடுப்பி வந்த போது பிராமணர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி என்ற காரணத்தால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
எனவே கிருஷ்ணனை சிறிய துவாரத்தின் மூலம் காண முயன்றார், ஆனால் அவருக்கு கிருஷ்ணனின் பின் பக்கம் தான் தெரிந்தது. மனமுருகிப் பாட ஆரம்பிக்க, கிருஷ்ணர் முகத்தை துவாரத்தை நோக்கி திருப்பினார். இதுவே இன்று 'கனகணகிண்டி' என்றழைக்கப்படுகிறது.
இன்று நாமும் இந்த குட்டி கிருஷ்ணனை அந்த ஜன்னல் வழியாக தான் பார்க்க வேண்டும். எல்லா கோயில்களிலும் பெருமாளின் முகம் கோயிலின் வாசற்பக்கம் நோக்கியிருக்கும் ஆனால் உடுப்பியில் இது மாறி இருப்பதற்கு இதுவே காரணம்.
![]() |
கோயில் குளத்துக்கு பக்கம் விறகுகளை தேர் போல அடுக்கி வைத்திருக்கிறார்கள்.....
ரொம்ப அழகாக இருக்கு ....ஆன இதை பற்றிய காரணம் தெரியவில்லை ...
![]() |
பசங்க ரொம்ப குட்டியா |
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம் ..
24 December 2015
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
கிறிஸ்துமஸ்காக நாங்கள் செய்த CRAFT கள் இவை....
இது பிரசன்னா செய்த வாழ்த்து அட்டை ....
நான் செய்த பைன் மரம் ....
கீர்த்தி செய்த wreath ..
பள்ளியில் சான்டவுடன் பசங்க ....
![]() |
மேலும் அனைவருக்கும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்....
அன்புடன்
அனுபிரேம்
உடுப்பி கிருஷ்ணர் கோயில்
அனைவருக்கும் வணக்கம் ..
நாங்கள் நான்கு வருடங்களுக்கு முன் சென்ற.. ஒரு சுற்றுலா பற்றிய பதிவு இன்று ...
நாங்கள் பெங்களூர் இருந்து ரெயில் மூலமாக மங்களூர் சென்றோம் ...பின் பேருந்தில் உடுப்பியை அடைந்தோம் ....வாருங்கள் உடுப்பிக்கு போகலாம் ...
உடுப்பி கிருஷ்ணர் கோயில்
கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிவிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது.
சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம்.
விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவம் துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி..... பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, பின் மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.
உடுப்பி பக்கம் இருக்கும் மால்பே கடலில் துவாரகையிலிருந்து வந்த ஒரு கப்பல் புயலில் சிக்கிக்கொண்ட சமயம் மத்வாச்சாரியார் கடற்கரையில் இருந்து அதை காப்பாற்றினார். கப்பலில் இருந்தவர்கள் அவருக்கு நன்றியைத் தெரிவிக்க என்ன வேண்டும் என்று கேட்க கப்பல் ஓரத்தில் கோபி சந்தனத்தால் ஆன கற்கள் இருப்பதை பார்த்து அதை வேண்டும் என்று கேட்டார்.
அதனுள்ளே இருந்துதான் இன்று நாம் பார்க்கும் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் வந்ததாக சொல்கிறார்கள். இன்றும் மத்வ சமூகத்தினர் கோபி சந்தனத்தால்தான் திலகம் இட்டுக்கொள்கின்றனர். கோபி சந்தனம் துவாரகாவிலிருந்து இன்றும் இங்கே வருகிறது. ( கிலோ 30ரூபாய் ). இந்த திருமேனி ருக்மணியால் பூஜிக்கப்பட்ட கிருஷ்ணரின் சாளக்கிராமத்தாலான திருமேனி என்றும் நம்பப்படுகிறது.
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்
உடுப்பி கிருஷ்ணர் கோவில் 2
15 December 2015
கறிவேப்பிலை பொடி
அனைவருக்கும் வணக்கம் ...
இன்று நான் பகிர இருப்பது கறிவேப்பிலை பொடி ...மிகவும் எளியமுறை
இன்று நான் பகிர இருப்பது கறிவேப்பிலை பொடி ...மிகவும் எளியமுறை
தேவையானவை ....
கறிவேப்பிலை - 2 கட்டு
கறிவேப்பிலை - 2 கட்டு
துவரம் பருப்பு - 3 ஸ்பூன்
உளுந்த பருப்பு - 3 ஸ்பூன்
மிளகு -2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
புளி - சிறிது
பூண்டு -5 பல்
மிளகாய் -6
உப்பு
உப்பு
செய்முறை ....
கறிவேப்பிலையை நன்றாக அலச வேண்டும் ...பின் அனைத்து பொருட்களையும் தனி தனியாக வறுத்து கொள்ளவும் ..... பிறகு நன்றாக அரைத்தால்.... நமது கறிவேப்பிலை பொடி தயார் .... இது இட்லிக்கும் சூடான சாதத்திர்க்கும் அருமையாக இருக்கும் ....
கறிவேப்பிலையை நன்றாக அலச வேண்டும் ...பின் அனைத்து பொருட்களையும் தனி தனியாக வறுத்து கொள்ளவும் ..... பிறகு நன்றாக அரைத்தால்.... நமது கறிவேப்பிலை பொடி தயார் .... இது இட்லிக்கும் சூடான சாதத்திர்க்கும் அருமையாக இருக்கும் ....
அன்புடன்
அனுபிரேம்
09 December 2015
தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 2 கிருஷ்ணர்
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் ...
முந்தைய பதிவில் பிள்ளையாரின் தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் பார்த்தீர்கள் ...இன்று எங்கள் வீட்டு கிருஷ்ணர் ....
![]() |
அன்புடன்
அனுபிரேம்
Subscribe to:
Posts (Atom)
-
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
-
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் ...