29 May 2016

மரவள்ளி கிழங்கு தோசை

அனைவருக்கும்  வணக்கம் ....

இன்றைய ஸ்பெஷல் மரவள்ளி கிழங்கு தோசை...


மரவள்ளி கிழங்கை பற்றி ....


  • மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ஃப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள்.

        
  • 88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்டது. 

        
  • ஆரோக்கியமான பருமனுக்கு உதவுகிறது.

        
  • ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. 

      
  •  ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 

         
  • கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

       
  •    ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது. 

         
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. 

          
  • உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது.

           
  • 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும் ... முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம். 

           
  • அல்ஸீமர் எனும் ஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. 


          
  • பதப்படுத்தப்பட்ட ஜவ்வரிசி வயிற்றுப்புண் ஆற்றுவதற்கும், எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது. 


           
  • அல்சர் நோய் இருப்பவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை நீர்க்க காய்ச்சி 1 மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக குடித்து வர வலி குறையும். 


தகவல்கள் இணையத்திலிருந்து .....
..


தேவையானவை .....

துருவிய மரவள்ளி கிழங்கு     -  1  கப்
இட்லி அரிசி                                       -  1  கப்
கடலை பருப்பு                                 -  1/4 கப் 
துவரம் பருப்பு                                   -  1/4 கப் 
வர  மிளகாய்                                     -   9
இஞ்சி                                                      -   சிறிது 
பூண்டு                                                    -   4 பல் 

சோம்பு                              -   சிறிது
உப்பு                                    -   தேவையான அளவு 





துருவிய மரவள்ளி கிழங்கு



செய்முறை ...

  மேலே  உள்ள  பொருட்களை  3   மணி நேரம்  ஊரவைத்து ....பின் அரைக்க வேண்டும் .... அந்த மாவை உப்பு சேர்த்து  மெலிதாக ஊற்றி எடுத்தால் ...மரவள்ளி கிழங்கு தோசை தயார் ..








                                                



அன்புடன்

அனுபிரேம்

7 comments:

  1. அருமையான சமையல் குறிப்பு! செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்!

    ReplyDelete
  2. செய்து கொடுத்தால் சாப்பிடுவேன்

    ReplyDelete
  3. அல்சைமருக்கு பயன்படுகிறது என்பது புதிய தகவல்.

    சுவையாக இருக்கும் என்று தெரிகிறது.

    ReplyDelete
  4. ஓ, கிட்டத்தட்ட அடைதோசை செய்வது போல....

    ReplyDelete
  5. அனு,

    பருப்பு தோசை மாதிரியே இருக்கு செய்முறை. தோசையின் படம் உடனே செய்ய வேண்டும்போல் உள்ளது. இன்று கிழங்கும் வாங்கியாச்சு. செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. கேள்விப்படாத குறிப்பு. செய்தால் நல்லா இருக்கும் என எண்ணுகிறேன். நல்ல தரமான கிழங்கு கிடைத்தால் செய்கிறேன் அனு. தகவல்கள் அருமை..

    ReplyDelete
  7. மரவள்ளி கிழங்கு அடை என்று சொல்வோம் அதில் இனிப்பு அடையும் செய்வோம்.

    முயலாமை அருமை.

    ReplyDelete