20 June 2016

பஞ்ச பாண்டவ ரதங்கள் -மாமல்லபுரம் 2


அனைவருக்கும் வணக்கம் .....


முந்தைய பதிவில் மாமல்லபுரத்தை பற்றி ரசித்தோம் ....இன்று அங்கு உள்ள பஞ்ச பாண்டவ ரதங்களை  காணலாம் ....



ஐந்து ரதம் அல்லது பஞ்சபாண்ட ரதம் என்று அழைக்கப்படும் இவை ஒற்றைப்    பாறையை  தேர் போன்ற நுணுக்கத்துடன் செதுக்கி எழுப்பப்பட்ட கோயில் வடிவங்களாகும். கடற்கரைக்   கோயிலைப்  போன்றே  இவையும்  உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்  பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த  ஐந்து  ரதக்கோயில்களும்   தனித்தனி   பாறைக்குடைவு அமைப்புகளாக   பிரத்யேக   வடிவமைப்புகளுடன் காட்சியளிக்கின்றன.  இவற்றில்   தர்மராஜா   ரதக்கோயில் அளவில் பெரியதாகவும்   சிற்ப   நுணுக்கங்களுடனும்   காட்சியளிக்கிறது.

முதலாம்   மஹேந்திரவர்மர் மற்றும் அவரது புதல்வராகிய முதலாம் நரசிம்மவர்மர் ஆகியோரால் இந்த ரதக்கோயில்கள்     நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன .






ஐந்து ரதம்









மேலும்  ஒரே கல்லில் செதுக்கிய யானை மற்றும் சிங்கத்தின் சிற்பங்கலும் அழகிய உருவில் இருக்கின்றன  ....













 




தொடரும் ....

அன்புடன் 

அனுபிரேம்


9 comments:

  1. பக்கத்துல இருக்கேன். இன்னும் பார்த்ததில்லை. ச்சே... ஒருமுறையாவது பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக காண வேண்டிய இடங்கள் ....நீங்கள் விரைவில் இந்த இடங்களை காண வாழ்த்துக்கள் ...

      Delete
  2. புகைப்படங்கள் அருமை.

    ReplyDelete
  3. அருமையான இடம். உங்கள் பதிவின் மூலம் மீண்டுமொரு முறை பார்த்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி..

      Delete
  4. சின்ன வயசுல பள்ளி சுற்றுலாவில் போயிருக்கேன் அனு, வெளிநாட்டவர் ஒருவர் எங்களை வளைச்சுவளைச்சு ஃபோட்டோ எடுத்தார், அதுமட்டுமே நினைவிருக்கு.

    படங்கள் எல்லாம் நேரில் பார்ப்பது போலவே அழகாய் உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சித்ரா ...இப்பொழுது எல்லாரும் எல்லா இடத்தையும் அப்படி தான் போட்டோ எடுக்குக்குறோம் ...


      இந்த படங்கள் எல்லாம் குட்டி நோக்கியாவில் எடுத்தது ....என்னுடைய முதல் கேமரா

      Delete
  5. உங்கள் கேமராவில் சிற்பங்கள் மிளிர்கின்றன...அதுவும் மழை மேகத்தின் நிறத்து வெளிச்சத்துடன்...அருமை

    ReplyDelete