29 December 2015

உடுப்பி கிருஷ்ணர் கோயில் 2


உடுப்பி கிருஷ்ணர் கோயிலின்  மூலவர் பற்றி முந்தைய பதிவில் பகிர்ந்தேன் ..இன்று உடுப்பி கிருஷ்ணரின் மற்ற சிறப்புகளை காணலாம்




 ...




 கோவில் குளம் 





           கன்னட பக்தர் கனகதாசர் ஒரு முறை பெருமாளை தரிசிக்க உடுப்பி வந்த போது பிராமணர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி என்ற காரணத்தால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 

           எனவே கிருஷ்ணனை சிறிய துவாரத்தின் மூலம் காண முயன்றார், ஆனால் அவருக்கு கிருஷ்ணனின் பின் பக்கம் தான் தெரிந்தது. மனமுருகிப் பாட ஆரம்பிக்க, கிருஷ்ணர் முகத்தை துவாரத்தை நோக்கி திருப்பினார். இதுவே இன்று 'கனகணகிண்டி' என்றழைக்கப்படுகிறது. 

            இன்று நாமும் இந்த குட்டி கிருஷ்ணனை அந்த ஜன்னல் வழியாக தான் பார்க்க வேண்டும். எல்லா கோயில்களிலும் பெருமாளின் முகம் கோயிலின் வாசற்பக்கம் நோக்கியிருக்கும் ஆனால் உடுப்பியில் இது மாறி இருப்பதற்கு இதுவே காரணம். 


















கோயில் குளத்துக்கு பக்கம் விறகுகளை தேர் போல அடுக்கி வைத்திருக்கிறார்கள்.....

ரொம்ப அழகாக இருக்கு ....ஆன இதை பற்றிய காரணம் தெரியவில்லை ...







பசங்க ரொம்ப குட்டியா 



தொடரும் ....

அன்புடன்

அனுபிரேம் ..

Image result for tamil ponmozhigal

3 comments:

  1. படங்களுடன் விளக்கமும் அருமை.
    இந்த கோயிலுக்கு கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வர வேண்டும்.

    ReplyDelete
  2. உடுப்பி கிருஷ்ணரின் சிறப்புகளை அறியத் தந்தமைக்கு அன்பின் நன்றி!
    மேலும்,'கனகணகிண்டி'பெயரின் மகிமை தங்களால் அறியப் பெற்றேன். மகிழ்ச்சி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  3. உடுப்பி கிருஷ்ணன் கோயில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு அழகாக இருக்கும் என்று தெரியாது. படங்கள் ரொம்பவே அருமை .

    ReplyDelete