28 March 2017

தஞ்சைப் பெரிய கோயில்.. 2... அழகு நந்தி...


வாழ்க வளமுடன்


அனைவருக்கும் வணக்கம்...


முந்தைய பதிவில்   தஞ்சைப் பெரிய கோயிலை..பற்றி  பிரமிக்க ஆரம்பித்தோம்...



பொதுவாக நந்தி போல் குறுக்கே நிற்காதே...என்பார்கள்...

ஆனால் இங்கு நந்தியே    விட்டே நகர முடியாத அளவு...அவரின் அழகு நம்மை கட்டிப் போடுகிறது...

அத்தகைய  பெரிய நந்தியை பற்றி பார்க்கலாம்...வாங்க...








கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது 'இராஜராஜன் திருவாயில்'.

அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது 'நந்தி மண்டபமும்' மாபெரும் நந்தி உருவமும்.


இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் 'வாராஹி' அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறதாக தகவல்கள் கூறுகின்றன...


பெரிய நந்தி:   இங்குள்ள நந்தி 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 9 அடி அகலம், 25 டன் எடையுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதை அமைப்பதற்காக திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கல் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது...


தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால்  உருவாக்கப்பட்டது..
.


முன்புற அழகு..





பின்னழகு..





எவ்வளோ பெரிய  நந்தி....  வலுவலுவென்ற  அழகிய உடல் அமைப்பு...
அவரின் பற்களை  பாருங்களேன்...என்ன நேர்த்தி...


இவர் நிற்பதர்காகவே   நிறைய வேலைப்பாடுகள் அமைந்த  பல தூண்களுடன் கூடிய  அழகிய  நந்தி  மண்டபம்.. ஒவ்வொரு தூணிலும் கலைநயம்...







நந்தியின் பார்வையில்  கோவில்








நந்தியின்  மேடையில் இருந்து கோவிலின்  முன்வாசல்..







நாங்கள் தீபாவளி அன்று சென்றோம் என கூறினேன்...நாங்கள் அங்கு சென்ற போது மதியம்  2 மணி .....ஆனால் நடை திறப்பு 4 மணிக்கு தான்  எனறு   கூறவே....ஒவ்வொரு இடத்தையும் நின்று பொறுமையாக  ரசிக்க முடிந்தது....விடுமுறை தினமாதலால்
சுற்றலா பயணிகளின் கூட்டமும் நன்றாகவே இருந்தது...


 தொடரும்...



அன்புடன்..

அனுபிரேம்


6 comments:

  1. நீங்க சொன்னதுபோல்தான் நந்தி மிக அழகு. பெரீய்ய நந்தி. கடைசிப்படம் ரெம்ப அழகு. கடைசியா நான் சென்றபோது கடும்வெயில். கலைநயமிக்க வேலைப்பாடுகள். தகவல்கள்,படங்கள் எல்லாமே அருமை அனு. திரும்பவும் செல்லவேண்டும் என ஆவல் உங்க பதிவை பார்க்க எழுகிறது. நன்றி

    ReplyDelete
  2. அழகிய புகைப்படங்களுடன் தந்தமைக்கு நன்றி தொடர்கிறேன்

    ReplyDelete
  3. படங்கள் எல்லாம் அழகு.. தொடரட்டும்!..

    ReplyDelete
  4. அறிந்த கோயில், படங்கள் பார்க்க மிக அற்புதம்.

    ReplyDelete
  5. அழகிய படங்கள்...
    தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் போக வேண்டும் என்ற ஆவல் வருகிறது.

    ReplyDelete
  6. பலமுறைகள் சென்று ரசித்த, ரசித்துக்கொண்டிருக்கும் எங்கள் ஊர்க்கோவிலைப்பற்றி இன்னொருவர் பார்வையில் படிக்கும்போது ரசனையாக இருக்கிறது!

    புகைப்பட‌ங்கள் மிகவும் அழகு!

    எல்லா கோவில்களையும் விட தஞ்சை பெரிய கோவிலுக்கு ஒரு தனியான சிறப்பு இருக்கிற‌து. இங்கே சந்தடிகள் அதிகமில்லாது அமைதி நிறைந்திருக்கும். மாலை நேரத்தில் நாதஸ்வர இசையின் பின்னணியில் இந்த அமைதியையும் கோவிலையும் ரசித்துக்கொன்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம்!

    ReplyDelete