தொடர்ந்து வாசிப்பவர்கள்

17 March 2017

எள்ளு மிட்டாய்..


அனைவருக்கும் வணக்கம்...

இன்றைய பதிவில் எள்ளு மிட்டாய்...  .ஏற்கனவே ஒருமுறை  எள்ளு உருண்டை   பதிவிட்டேன்... அப்பொழுது  எள்ளை வறுத்து ,  பொடித்து செய்து இருந்தேன்...


ஆனால்   கடையில்   கிடைப்பது போல் முழு எள்ளாக உள்ள மிட்டாய்
செய்யும்  ஆசையால் விளைந்தது.. இந்தமுறை   செய்த  எள்ளு மிட்டாய்..தேவையானவை...


எள்     - 1 க

வெல்லம் - 3/4 க
செய்முறை

எள்ளை நன்றாக வறுக்க  வேண்டும்... .... பின்  வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து   பாகு காய்ச்ச  வேண்டும்....(ரொம்ப கெட்டி பாகும் கூடாது....தண்ணி பாகும் கூடாது....மிதமான அளவில் இருக்க வேண்டும்..  )

அதில் வறுத்த   எள்ளை சேர்த்து சிறிது நிமிடம் கிளறி இறக்க வேண்டும்... பின் அதை நெய் தடவிய தட்டில்  பரப்பி....கத்தி அல்லது கரண்டியால்  லைன் போட  வேண்டும் ......சிறிது   ஆறியபின் அதை பிரிக்க  ..சுவையான  எள்ளு மிட்டாய்  ரெடி..


என்னுடையதில் சரியான அளவில்  மிட்டாயை பிரிக்க இயலவில்லை.... ஆனாலும் சுவை நன்றாக இருந்தது..

(  வடிவமா முக்கியம்....சுவை தானே  முக்கியம்...)


அன்புடன்

அனுபிரேம்...


35 comments:

 1. நல்ல இனிப்புதான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா ..சுவையான இனிப்பு தான்...வருகைக்கு நன்றி..

   Delete
 2. நன்றி...

  எனக்கு மிகவும் பிடிக்கும்... இன்றே செய்து பார்க்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. செஞ்சு பார்த்து சொல்லுங்க dd சார்...

   Delete
 3. இதை நாங்க எள்ளுருண்டை என்போம். முன் பாதிவில் நீங்க சொன்னது எங்களுக்கு எள்ளுபாகு என்போம். ஆனா எங்க வீட்டில எள்ளில் எது செய்தாலும் உடனே காலியாயிடும். உங்க எள்ளுருண்டை பதிவு ல் சொன்னது போல் செய்தாச்சு.அருமையாக வந்தது. என்ன இடையில் காணாமல் போயிட்டேனா பதிவா வரல்ல. இன்னொரு தரம் செய்து போடுறேன் அனு.
  அதானே..! சுவையா இருந்தா போதுமே..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்முலு...

   நீங்க எள்ளுருண்டை செஞ்சு பார்த்தேன் சொன்னதே ரொம்ப மகிழ்வா இருக்கு..

   தொடர்ந்து வாங்க....முன்பெல்லாம் என் பதிவில் உங்க பின்னூட்டம் தான் முதலில் வரும்...

   Delete
 4. சுவைதான் முக்கியம் ..பார்க்கவே அருமையா இருக்கு அனு ..எங்க ஏரியாவில் குஜராத்தி GUR கிடைக்குது ரொம்ப ஸ்வீட் அதில் பாதியளவு போட்டு செய்றேன் .எங்க வீட்ல செஞ்ச அன்னிக்கே காலியாகிடும் இந்த ஸ்வீடலாம்

  ReplyDelete
  Replies
  1. இங்கையும் அப்படித்தான்...மற்ற கார நொறுக்கு தீனி எல்லாம் நான் செய்யற அன்னைக்கி மட்டும் தான் சாப்பிடுவேன்...ஆன இனிப்பு னா எனக்கு சலிக்காது...

   Delete
 5. எனக்குப் பிடித்த மிட்டாய்! சுவை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம் சார்..

   Delete
 6. சிறுவயதில் எள்ளுருண்டை மிட்டாய் என்று விற்பார்கள்
  வாங்கி மகிழ்ந்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா...

   Delete
 7. எள்ளுருண்டை பிடிக்காதோர் ஆரும் இருக்க மாட்டினம்.. ஆனா இப்போதைய ஜெனரேஷனுக்கு பிடிக்குதில்லை(நம் பிள்ளைகளைச் சொன்னேன்).

  நல்லா வந்திருக்கு ஆனா கொஞ்சம் பாகு முறுகி விட்டதோ?.. சுவை இருந்தால் சரிதான் அத்தோடு பாகம் பிழைத்தால் பல்லுப் போய்விடும்:) இப்போவெல்லாம் நான் என் பல்லில் வலு கவனமாக்கும்:).

  ReplyDelete
  Replies
  1. நானும் சின்ன வயசுல விரும்பி சாப்பிட்டது இல்ல...ஆனா இப்போ ரொம்ப பிடிக்குது...

   இங்க பசங்களுக்கும் ரொம்ப இஷ்டம்...

   ஆமா....ரகசியத்தை சபையில சொல்ல கூடாது...சரி உங்களுக்கு மட்டும் சொல்றேன்...பாகுல கொஞ்சம் சொதப்பிடேன் தான்...

   Delete
  2. வெயிட் வெயிட் :) அதிரா பல்செட்டில் கவனம்னு டைப்பரத்துக்கு பதிலா பல்லில் கவனம்னு போட்டுட்டாங்க
   மக்களே அது பல் செட் செட் பல் பல் செட் :) என்று வாசிக்கவும்

   Delete
  3. //ஆனா இப்போதைய ஜெனரேஷனுக்கு//

   மணிரத்தினம் பட டயலாக் நினைவுக்கு வருது :) தாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா ..அதே மாதிரி டோனில் வாசிக்கவும்
   //நீங்க 16 இல்லை 61 /// சொல்லுங்க அதிரா சொல்லுங்க

   Delete
  4. பல் செட்டா....அச்ச்சோ..பாவம் அதிரா...

   ஆனாலும் அதிரானு பேர கேட்ட எல்லா blogக்கும் அதிருதுல...

   நான் அதிரா ரசிகர் மன்ற உறுப்பினர்...ம்ம்ம்...

   Delete
  5. ///மக்களே அது பல் செட் செட் பல் பல் செட் :) என்று வாசிக்கவும்////
   அஞ்சலை எனக் கூப்பிட்டுப்போடுவேன் இனிமேல் ஜாக்ர்ர்ர்ர்தை:).. ஹா ஹா ஹா.. இப்போ எல்லாம் தேம்ஸ்ல தள்ளுவேன் என மிரட்டினால் அஞ்சு பயப்படுவதாக இல்லை:) அதனால்தான் இந்த அஞ்சலையை அழைச்சு வந்தேன்ன்:)..

   Delete
  6. ///நான் அதிரா ரசிகர் மன்ற உறுப்பினர்...ம்ம்ம்...///
   ஹையோ ஹா ஹா ஹா... மியாவும் நன்றி:).. ஆனா ஏன் தேம்ஸ் பக்கம் புகைப்புகையா வருதூஊஊஊ?:).

   Delete
 8. உடலுக்கு நலமூட்டுவது எள் உருண்டை.. ஆயினும்,

  பருவ வயதிலுள்ள பெண் பிள்ளைகள் இதை உண்ணுவதில் கவனம் கொள்ள வேண்டும்..

  நிறைந்த மருத்துவ குணங்களை உடையது - எள் மிட்டாய்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா...நல்ல வலு சேர்க்கும் சிற்றுண்டி...

   Delete
 9. அட எனக்கு எள்ளும் எள்ளுடன் நேர்ந்த எதுவுமே பிடிக்கவே பிடிக்காதுப்பா. எனக்கு நேரெதிர் என் ஆத்துக்காரர். ஊரிலிருந்து யார் வந்தாலும் எள்ளுருண்டை பார்சல் கட்டாயம் வந்திரும், அத்தனையும் தனியே ஒத்தையாளாய் சாப்பிடுவார்.

  உருண்டை பிடிக்க வராவிட்டால் அதுக்கு பேரு எள்ளு ஸ்வீட் மிக்ஸர் என புதுப்பேயரை வைத்து படம் எடுத்து அனுராதாவின் நீயு கண்டு பிடிப்பு என காப்புரிமை பெற்றிருக்கணும். உண்மையை இப்படில்லாம் போட்டுடைக்க கூடாது. ஏஞ்சல் மாதிரி சுவைதான் முக்கியம் வடிவம் முக்கியமில்லை என நான் சொல்ல மாட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா...எள்ளு ஸ்வீட் மிக்ஸர் ..பேரு நல்லா இருக்கு ..அடுத்த சொதப்பல் ரெசிப்பிகு பேர் ரெடி...


   (கடவுளே..எல்லாரையும் காப்பாத்துங்க...)

   Delete
  2. என்னையும் தேன்ன்ன்:).. நான் கடவுளிடம் சொன்னேனாக்கும்:)..

   Delete
  3. பாவக்காய்கே காப்பத்துற கடவுள்...இனிப்புலையா கைவிட்டுருவாரு...

   Delete
 10. ஏஞ்சலின் என்னை பற்றி நான் பதிவிலிருந்த உங்க பின்னூட்டம் மூலம் இந்த பக்கம் முதல்முறை எட்டிப்பார்த்தேன். மறக்காமல் சுவிஸுக்கும் வெல்கம் கிப்ட் அனுப்பி வைக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நிஷா....

   உங்க முதல் வருகைக்கு மிகவும் சந்தோசம்...தொடர்ந்து வாங்க....

   ஆன நான் உங்க பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன்...சில பதிவுல பதில் கூட போட்டு இருக்கேன் ( புலி வருது...பாடல் பதிவுல பாருங்க..)..


   சுவிஸுக்கு எதுக்கு வெல்கம் gift ... ஆன உங்களுக்களோட வெல்கம் gift ட கண்டிப்பா நேர்ல வரும் போது தறோம்...

   Delete
 11. வடிவம் முக்கியமில்லை சகோ/அனு

  சுவைதான். மிகவும் ப்டித்த இனிப்பு எங்கள் இருவருக்குமே!
  அருமை!

  கீதா: அனு வெல்லைத்தைக் கரையவிட்டு வடி கட்டுங்கள். சில சமயம் மண் இருக்குமில்லையோ? கறுப்பு எள்ளிலும் செய்யலாம். இன்னும் நல்லது தோல் இருப்பதால்.

  நல்ல பகிர்வு அனு!!!

  ReplyDelete
  Replies
  1. கறுப்பு எள்ளில் உருண்டை தான் வழக்கமா செய்வது...இந்த முறை ஒரு முயற்சியாக இந்த மிட்டாய் செய்து பார்த்தேன்...

   ஆமாம் ..நீங்க சொல்லுவது போல் வெல்லத்தை கரையவிட்டு தான் சேர்த்தேன்...

   Delete
 12. அனு .. அதிராகிட்டருந்தும் என்கிட்டருந்துமே கடவுள் இந்த அப்பாவி ஜனங்களை காப்பாற்றும்போது இதெல்லாம் ஒண்ணுமேயில்லைப்பா :)

  ReplyDelete
 13. உண்மை...உண்மை...

  (...சும்மா..)

  ReplyDelete
  Replies
  1. என்னாதூஊஊஊஉ கடவுள் மக்களைக் காப்பாற்றுறாரா? கரீட்டூஊஊஊ.. மக்களைக் கடவுள் காக்க:).. கடவுளை நாம் காக்கிறோம்:)..

   ஓடியாங்கோ அனு.. இப்பவும் சொல்லோணும் உண்மை.. உண்மை என:) நான் சொன்னால் மட்டும் பொய்யோ?:) விடமாட்டேன்ன்ன்:)..

   Delete
  2. உண்மை...உண்மை..உண்மை...

   (அதிரா சொன்ன மாதரி சொல்லிட்டேன்..)

   Delete