25 May 2021

வைகாசி விசாகம்

 சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, 

கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, 
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம்  வைகாசி விசாகம்.




















அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த  கந்தர் அனுபூதி. ..

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே. 10

மலர் மாலையணிந்த திரு மார்பினரே, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுடைய பொன்னுலகை அழித்த, சூரனாகிய மாமரம் அழியும்படி செலுத்திய, வேலாயுதக் கடவுளே, கரிய எருமையின் மீது, காலன் வரும்போது, அழகிய தோகையை உடைய மயில் வாகனத்தில் எழுந்தருளி, அடியேன் எதிரே வந்தருள்வீராக ..


கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே. 11

திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே, வேலாயுதக் கடவுளே, நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத் தந்தவரே, தேவலோகத்திற்கு சிகாமணியாக விளங்குபவரே, என் சுற்றத்தார் ஒன்று கூடி, கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு, இறந்து போகாத வண்ணம், உண்மையான பொருளை அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே ..







முருகா , 
அனைவருக்கும் நல்ல உடல் நலத்தையும் , மனோ பலத்தையும் தந்தருள வேண்டும் ...

முருகா சரணம்...

கந்தா சரணம்.....

வடிவேலா சரணம்.....


அன்புடன்
அனுபிரேம்.....

1 comment:

  1. முருகனுக்கொருநாள் திருநாள் என்றால் மனம் துள்ளுகிறதுதான்.

    ReplyDelete