12 October 2024

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், ஸ்ரீ பெரும்புதூர்

ஸ்ரீ ஆதிகேசவப்  பெருமாள் திருக்கோவில் - ஸ்ரீ பெரும்புதூர் 

 சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவு. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ.  தொலைவிலும் ஸ்ரீ ஆதிகேசவப்  பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

சுவாமி ராமானுஜர், தான் அவதரித்த இடத்திற்கு எதிரிலேயே தன் தினசரி தரிசனத்துக்காக உருவாக்கினாரோ என்று எண்ண வைப்பது போல இக்கோவில்  அமைந்திருக்கிறது.


05 October 2024

ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில்

 ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில்

சிதம்பரத்தில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் சேத்தியாத்தோப்பில் இருந்து சுமார் 17 km தொலைவிலும் இக்கோவில்  உள்ளது .

108 திவ்ய தேசங்களைத் தரிசித்த புண்ணிய பலனைத் தரும் ஒரே ஆலயம் இது என்று கல்வெட்டு உள்ளதாக கூறுவர். இது திவ்ய தேசமல்ல ஆனால் அதனினும் பெருமை வாய்ந்தது. சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. கல் வெட்டுகளில் இவ்வூர் "வீர நாராயண புரம்" என குறிப்பிடப் பட்டுள்ளது.

காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம்.