இருபத்தொன்பதாம் பாசுரம் - இதில் மிகவும் முக்யமான கொள்கையை வெளியிடுகிறாள் – அதாவது, கைங்கர்யம் நம் ஆனந்தத்துக்கு இல்லை அவனுடைய ஆனந்தத்துக்கு மட்டுமே. மேலும் க்ருஷ்ணானுபவத்தில் கொண்ட மிகப் பெரிய அவாவினால், இந்த நோன்பை அதற்கு ஒரு வ்யாஜமாக மேற்கொண்டதையும் தெரிவிக்கிறாள்.
அனுவின் தமிழ் துளிகள்
அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
12 January 2026
11 January 2026
திருப்பாவை 28
10 January 2026
திருப்பாவை 27
இருபத்தேழாம் பாசுரம் - ஆண்டாள் எம்பெருமான் அனுகூலர் மற்றும் ப்ரதிகூலர்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்வதாகிய விசேஷ குணத்தை விளக்குகிறாள். மேலும் உயர்ந்த புருஷார்த்தம், எம்பெருமானுடன் எப்பொழுதும் பிரியாமல் இருந்து தொடர்ந்து கைங்கர்யம் செய்வதாகிய ஸாயுஜ்ய மோக்ஷமே என்பதை நிரூபிக்கிறாள்.
09 January 2026
திருப்பாவை 26
இருபத்தாறாம் பாசுரம் - இதில் நோன்புக்குத் தேவையான உபகரணங்கள் என்ன என்பதை அவனுக்கு அறிவிக்கிறாள்.
முன்பு எதுவும் வேண்டாம் என்று சொன்னவள், இப்பொழுது மங்களாசாஸனம் செய்வதற்கு பாஞ்சஜந்யாழ்வான் முதலிய கைங்கர்யபரர்கள், அவன் திருமுகத்தைத் தெளிவாகக் காண ஒரு விளக்கு, அவன் இருப்பை அறிவிக்கும் கொடி, அவனுக்கு நிழல் கொடுக்கும் விதானம் போன்றவைகளைக் கேட்கிறாள்.
நம் ஆசார்யர்கள், ஆண்டாள் இவற்றைத் தான் செய்யும் க்ருஷ்ணானுபவம் முழுமையாகவும் முறையாகவும் அமைவதற்கு இவ்வுபகரணங்களை வேண்டுகிறாள் என்று காட்டுகின்றனர்.
08 January 2026
திருப்பாவை 25
07 January 2026
திருப்பாவை 24
இருபத்து நாலாம் பாசுரம் - அவன் அவ்வாறு அமர்ந்ததைக் கண்டு அவனுக்கு மங்களாசாஸனம் செய்கிறாள். பெரியாழ்வார் திருமகளாராதலால், ஆண்டாளின் லக்ஷ்யம் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்வதே. ஸீதாப் பிராட்டி, தண்டகாரண்யத்து ரிஷிகள், பெரியாழ்வார் போலே ஆண்டாளும் அவள் தோழிகளும் எம்பெருமான் நடையழகைக் கண்டதும் மங்களாசாஸனம் செய்தார்கள். மேலும் இப்படிப்பட்ட ம்ருதுவான திருவடிகளை உடைய எம்பெருமானை நடக்க வைத்துவிட்டோமே என்றும் வருந்தினார்கள்.
06 January 2026
திருப்பாவை 23
இருபத்துமூன்றாம் பாசுரம் - இதில் கண்ணன் எம்பெருமான் ஆண்டாளை வெகுகாலம் காக்க வைத்ததை எண்ணி, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அவள் எம்பெருமானைப் படுக்கையை விட்டு எழுந்து, சில அடிகள் நடந்து, அவனுடைய சீரிய ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருளி, சபையில் தன் விண்ணப்பத்தை ஒரு ராஜாவைப் போலே கேட்குமாறு ப்ரார்த்திக்கிறாள்.
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...