27 January 2015

சுற்றுலா - கர்நாடகா -கொல்லூர் 2

அனைவருக்கும்  வணக்கம் பல  ...

நேற்றைய பதிவில்  கர்நாடகா -கொல்லூர் பற்றி ஆரம்பித்தேன் ...

மேற்கு தொடர்ச்சி மலையில் கொடசத்ரி உச்ச பள்ளத்தாக்கில் இருந்து மங்களூருக்கு 135 கி.மீ மற்றும் உடுப்பி இருந்து 80 கி.மீ. தொலைவில், ஒரு அமைதியான நகரம் கொல்லூர் .பார்வதி தேவி  கோயில் சரியாக மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில்  இருக்கும்  வற்றாத நதி சௌபர்ணிகா  கரையில் அமைந்துள்ளது.


அம்மன் 

வரலாறு -

  • இது பார்வதி தேவிக்காக   பரசுராமரால் உருவாக்கப்பட்ட கோவில்  என்று நம்பப்படுகிறது.


  • தேவி மூகாம்பிகை சிவன் மற்றும் சக்தி இருவரையும் இணைத்து ஜோதிர்-லிங்க (Jyothirlingam) வடிவில் இருக்கின்றாள் .


  •  பகவான் சங்கரர் முதன் முதலில் இந்த இடத்திற்கு வந்தபோது, கோல மகரிஷி வழிபட்ட சுயம்பு லிங்கம் இருந்தது..பின் ஸ்ரீசங்கராச்சாரியார் அம்மன் உருவம் லிங்கதிர்க்கு பின் மறைந்து உள்ளதை அறிந்து  தவம் மேற்கொண்டார் ....அம்மா மூகாம்பிகை ஆச்சார்யார்  முன் தோன்றினார்.  ஸ்ரீ சங்கரர்  மனதில் தோன்றிய அம்மா மூகாம்பிகையை   அடிப்படையாக கொண்டு அம்மா மூகாம்பிகை சிலையை  ஸ்ரீ சங்கரர் செய்வித்தார்... 

  பின்  ஸ்ரீ சக்ரா மேல் இருக்கும் தேவியின் பஞ்சலோக படத்தை  ஆதி சங்கரர் அமைத்தார் .

  •   அபிஷேகம்  லிங்கத்திற்கு  செய்யப்படுகிறது. பிற அலங்காரம்   தேவிக்கு  செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யும் போது பக்தர்களுக்கு   லிங்கம் மத்தியில், ஒரு தங்க கோடுதெரியும் ... இது சரஸ்வதி, லட்சுமி, பார்வதி  வலது பக்கமும்  பிரம்மா, விஷ்ணு  லிங்கத்தின்  இடதுபக்கமும் இருந்து அருள்  அளிப்பதாக கூறப்படுகிறது. 


  • கோல மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்ததால்   கொல்லூர் என அழைக்கப்பட்டு வருகிறது. 


  • வழக்கமாக , கோயில் கதவுகள் கிரகண காலத்தில் மூடப்படும் , ஆனால் இந்த கோவிலில் ஒரு விதிவிலக்கு. .பூஜைகளை கிரகண காலங்களில் கூட தொடர்ந்து செய்கின்றனர் ... 


  •  தேவி மூகாம்பிகை   நான்கு கைகள்,  மூன்று கண்கள் மற்றும் தனது கையில்  தெய்வீக சங்கு சக்கரத்துடன் காட்சி  அளிக்கின்றார். 


  • கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில்  புனித நதியான சௌபர்ணிகா கரையில் அமைந்துள்ளது. நதி ஓடுகிறது பாதையில்   64 வெவ்வேறு மருத்துவ வேர்கள் மற்றும் தாவரங்களின்  சக்திகளை  உறிஞ்சுகிறது. எனவே, அது  பக்தர்களின்  அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என நம்பப்படுகிறது. இந்த ஆற்றின்  தண்ணீர் கோவிலின்   தீர்த்தமாக  பயன்படுத்தப்படுகின்றது.


  • தேவி மூகாம்பிகை சரஸ்வதி, சக்தி மற்றும் மகாலட்சுமியின்  வெளிப்பாடு என கருதப்படுகிறது.
முகப்பு 
முகப்பு 



தொடரும்...

கொல்லூர் 3



அன்புடன்
அனுபிரேம்



2 comments:

  1. கொல்லூர் மூகாம்பிகை பற்றிய வரலாறு, படங்கள் அருமை. கோவில் முகப்பு அழகா இருக்கு.

    ReplyDelete
  2. மிகவும் நன்றி பிரியசகி ... வருகைக்கும் பதிவிற்கும்

    ReplyDelete