02 February 2015

சுற்றுலா - கர்நாடகா -கொல்லூர் 3

வணக்கத்துடன் தேவி மூகாம்பிகை கோவில் கொல்லூர்  பற்றி    தொடர்கிறேன் ...

முந்தைய பதிவில்  தேவி மூகாம்பிகையை பற்றி அறிந்தோம் ...

இன்று கோவிலை பற்றிய சில சிறப்பு தகவல்கள் ...





 தீபஸ்தம்பம் 


  ஒரு ஆமையின் தலை போன்ற தீப ஸ்தம்பம் உள்ளது . இங்கு  அனைத்து விளக்குகளும் எரிகிறது போது அது (சபரிமலை கோயில்) மகரஜோதி போல்  இருக்குமாம் .இது சுமார் 21 அழகான வட்டவடிவமாக உள்ளது.


நன்றி கூகிள் 

நன்றி கூகிள் 





கொல்லூர் மூகாம்பிகை கோவிலின்  பிற தெய்வங்கள் -ஸ்ரீ சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஸ்ரீ பர்தீஸ்வரர் , ஸ்ரீ பஞ்சமுஹ கணபதி, ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் , ஸ்ரீ ப்ரனலிங்கஷ்வரர் , ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் , ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ வெங்கட்ரமணா, ஸ்ரீ துளசி கோபாலகிருஷ்ணர்  உள்ளனர் .

வித்யாரம்பம் -  (அறிவு தொடக்கத்தை குறிக்கிறது),வித்யா என்றால் அறிவு,  ஆரம்பம் என்றால் தொடக்கம் என்று பொருள். குழந்தைகளுக்கு  கல்வி உலகின் அறிமுகம் இங்கு ஆரம்பம் ஆகிறது ,இந்த நிகழ்ச்சி  நவராத்திரி திருவிழாவின் இறுதி நாள் சரஸ்வதி மண்டபத்தில் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் வித்யாரம்பம் கோவிலில் அனைத்து   நாளிலும்  நடத்தப்படும்.
வித்யாரம்பத்தில் மந்திரம்   அரிசி  உள்ள ஒரு தட்டில் குழந்தையால்  எழுதப்படும் .


கோவிலின் தங்க தேர் 
நன்றி கூகிள் 
காண்பதற்கு இந்த தேர் மிகவும் ஆழகு..

 நவராத்திரி திருவிழா  கர்பக்கிரகம் தாண்டி நடைபாதை தூண் மீது உள்ள  விநாயகர் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது. 

எங்களுக்கு மிகவும் சிறப்பான தரிசனம் கிடைத்தது மதியம் ,இரவு, அதிகலை என .....

பிறகு  பையந்தூர் வழியாக முருடேஷ்வர் பயணம் ஆனோம் .

முன்னால் சென்ற வாகனம் 


தொடரும்...



அன்புடன்
அனுபிரேம்



3 comments:

  1. அனைத்து நாளிலும் வித்தியாரம்பம் என்பது புதுதகவல். கோவில் பற்றிய தகவல் அருமை. முருடேஷ்வர் போகும் பாதை அழகா இருக்கு.பசுமையாய்.
    சாப்ளின் மொழி அருமை .நன்றி அனு.-

    ReplyDelete
    Replies
    1. வித்யாரம்பம் தினமும் காலை 6 மணிக்கு நடைபெறும் ...ஆம் பைந்தனூர் சாலை மிகவும் பசுமையாக கண்ணுக்கு விருந்தாக அமைந்தது... வருகைக்கும் பதிவிற்கும் மிகவும் நன்றி தோழி

      Delete
  2. கொல்லூர் அருமை....படங்களும்...

    ReplyDelete