அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் .....
இதுவரை கொல்லூர் தேவி மூகாம்பிகை கோவில் பற்றி அறிந்தோம் ...
அடுத்து காண இருப்பது முருடேஸ்வரர் ,இது கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் பட்கல் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்..
முகப்பு |
முகப்பு |
உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலையை இங்கு உள்ளது .இந்நகரம், அரபிக்கடலோரம் அமைந்துள்ளது.இந்த கோவில் அரேபிய கடலின் நீரினால் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது. இது கண்டுக (Kanduka) மலையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவன் கோவில் உள்ளது, மேலும் இருவது மாடி இராஜகோபுரமும் உள்ளது . இராஜ கோபுரத்தின் மேல் இருந்து 123 அடி சிவன் சிலையை காண ஒரு இயங்கு ஏணி (லிப்ட்) நிறுவப்பட்டு உள்ளது .
இராஜகோபுரம் |
இராஜகோபுரம் |
இரண்டு யானைகள் முக்கிய வழிமுறைகளை காவல் புரிய இராஜ கோபுரத்தின் அருகே உள்ளது .
இங்கு சுற்றுல்லா வருவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம் .....
நாங்கள் சென்ற அன்று விடுமுறை ஆதலால் மிகவும் நெரிசலாக இருந்தது ....
தொடரும்...
முருடேஸ்வர் 2
முருடேஸ்வர்-3
முருடேஸ்வர் -4
அன்புடன்
அனுபிரேம்
வாவ் என்ன ஒரு அழகான கோபுரம். உங்க பகிர்வினால் பார்க்க கிடைத்தது. முகப்பு படமும் மிக அழகு. நன்றி.
ReplyDeleteஉங்கள் மகிழ்ச்சிக்கு மிகவும் நன்றி பிரியசகி ...
Deleteபடங்கள் அருமை! முர்டேஸ்வரன் சென்றிருக்கின்றோம். தொடர்கின்றோம்,
ReplyDelete