18 February 2015

சுற்றுலா - கோகர்ணா

கோகர்ணா - கர்நாடகாவில் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள  ஒரு சிறிய கோவில் நகரமாகும். இந்த சிறிய நகரத்தில்  பல ஆலயங்கள் உள்ளன.



கோகர்ணா கோயில் தட்சிண காசி (தென் காசி) என்றும்  அழைக்கப்படுகிறது . இது வட இந்தியாவில்  கங்கை கரையில் உள்ள  காசி  சிவன் கோவில் போன்ற சக்தி வாய்ந்தாக  கருதப்படுகிறது .

கோகர்ணா என்றால்  மாட்டின்  காது என்று பொருள். இங்குள்ள சிவன் ஒரு மாட்டின் காதில்  இருந்து வெளிப்பட்டது என்றும்  நம்பப்படுகிறது.  கங்கவளி மற்றும் அகானஷினி   ஆறுகள்  காது வடிவ சங்கமிக்கும் இடத்தில் கோகர்ணா அமைந்துள்ளது.









கோகர்ணா  "சித்தி க்ஷேத்திரம்", கர்நாடக "முக்தி ஸ்தல " என்றும்  மதிக்கப்படுகிறது.இது காசி மற்றும் ராமேஷ்வர் அளவு  முக்கியமான சிவன் மையம்.

இங்கு உள்ள கோவில்கள் -

1.மஹாபலேஷ்வர் கோயில்: -


மஹாபலேஷ்வர் கோயில் (மகா என்றால்  மாபெரும், பந்து என்றால் பலம் என்றும் பொருள் ) - ஒரு புகழ்பெற்ற சிவன் கோவில், இங்கு ஆத்மலிங்கம்  உள்ளது. மேலும் இங்கு   ஆறு அடி உயரம் உள்ள  சிவலிங்கம் உள்ளது.  அது சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது.

image012
ஆத்மலிங்கா  

இராவணன்  ஆத்மலிங்காவை  இழுக்க முயற்சிக்கும் போது  அது  காது வடிவில் வெளியே வந்தது  என்றும் கூறுவர் .


இங்கு பக்தர்கள் சிவலிங்கத்தை  தொட அனுமதிக்கப்படுகின்றனர் . மேலும்  தங்கள் கைகளால் ருட்ரபிஷேக செய்ய முடியும்.



image010
பீடம் 



தேர் --இக்கோவிலின் தேர் நான்கு புறமும் அழகாக  வர்ணம் செய்யப்பட்டுள்ளது.

முகப்பு 

கிருஷ்ணன் 

விநாயகர் 

முருகன் 










அடுத்த பதிவில்


2.ஸ்ரீ மகா கணபதி கோயில்


3.ஸ்ரீ வெங்கடரமணா கோவில்

4.லக்ஷ்மணர் கோவில்

5. இராமர் திருக்கோவில்

Kudle கடற்கரை


ஓம் கடற்கரை


அன்புடன்
அனுபிரேம்


5 comments:

  1. கோகர்ணம் 8 வருடங்கள் முன்பு சென்று இருக்கிறேன். தாங்கள் நன்கு விளக்கத்துடனும், அழகான புகைப்படத்துடனும் பகிர்ந்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அழகான புகைப்படம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கோகர்ணம், லிங்கம் பற்றிய தகவல்களை அழகான படங்களுடன் பகிர்ந்திருக்கின்றீர்கள் அனு.நன்றி.

    ReplyDelete
  4. உங்க மூலமா இப்படி பல ஊர் சுத்தி பார்க்கிறதும் நல்ல அனுபவமா தான் இருக்கு:)) நன்றி தோழி!

    ReplyDelete
  5. படங்களும் பதிவும் விஷயங்களும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    //கோகர்ணா என்றால் மாட்டின் காது என்று பொருள்.//

    இது என் ஒரு காதில் ஏற்கனவே விழுந்துள்ளது. இப்போது தாங்களும் என் மற்றொரு காதில் போட்டுள்ளீர்கள். இனி மறக்க மாட்டேன். மிக்க நன்றி

    அன்புடன் VGK

    ReplyDelete