தொடர்ந்து வாசிப்பவர்கள்

15 December 2016

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டுஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி  சொக்கப்பனை கொளுத்தும்  நிகழ்வின்  படங்கள் இன்று......

உற்சவர் நம்பெருமாள் முதலாம் புறப்பாடாக  காலை 9 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு வருவார்...

அங்கு நம்பெருமாள் காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருமஞ்சனம் கண்டருள்வார்..... பின்னர் மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 5 மணிக்கு மூலஸ்தானம் சென்றார்....


   அதன்பின் 2-ம் புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு கதிர் அலங்காரத்தில் கார்த்திகை கோபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு கோபுரத்திற்கு முன் பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை பந்தலை நம்பெருமாள் வலம் வந்து சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிரே நின்றபின் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது...
அருமையான நிகழ்வு.....அப்பாவும் அம்மாவும்....நேரில் சென்று தரிசித்தனர்....ஆனால் படங்கள் எடுக்க இயலாத அளவு மக்கள் நெருக்கமாம்....


எனவே படங்கள்   ஸ்ரீரெங்கம்.org  லிருந்து ...அன்புடன்
அனுபிரேம்...மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்

கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்

இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய

பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே.-தொண்டரடிப் பொடியாழ்வார்

முதல் திருமொழி (875)


.

4 comments:

  1. நேரில் பார்த்த உணர்வை தந்தது பதிவு.நன்றி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Wonderful coverage of the event.

    ReplyDelete