சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து கடுமையான தீப்பொறிகளின் வடிவத்தில் பிறந்தார் முருகப்பெருமான். தீ பொறிகளின் தீயின் உக்கிரம் தேவர்களால் தாங்க முடியாததால் தீப்பொறிகள் ஆற்றில் மூழ்கி குளிர்விக்கப்பட்டன. அந்த வலிமை மிகுந்த நதி சரவணப் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. தீப்பொறிகள் ஆறு தீப்பொறிகளாக சிதறி ஆறு குழந்தைகளாக தாமரை மலர் மீது அவதரித்தன .
கார்த்திகை பெண்கள் குழந்தைகளை வளர்த்தனர்.பின்னர் பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் அணைத்து ஒரே ஆண் குழந்தையாக ஒன்றிணைத்தார். அவரே முருகப் பெருமான்.
12 கைகளையும் ஆறு முகங்களையும் ஆறுமுகப்பெருமான் ஞானவிருட்சமாகிய சிவபெருமானின் நெற்றி கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியிலிருந்து உதித்தவர் ஆவார்.
🌹🌿 விசாகம் என்பதற்கு துளித்து வருதல் என்ற பொருள் உண்டு .ஆறு குழந்தைகளை தாய் ஒன்று படுத்திய திருநாள் வைகாசி விசாகம் என்பதால் கந்தன் என்றும் கூறுவர்.
ஆறுமுக கடவுளான முருகனுடைய ஆறுமுகங்களின் பண்புகள்:
🌹🌿 முருகப்பெருமானின் ஆறுமுகங்கள் ஆறு வெவ்வேறு பண்புகளை குறிக்கின்றன.
1. முதல்முகம் உலகைச் சூழ்ந்துள்ள இருளை நீக்கி மகிமையான ஒளிக் கதிர்களை வெளியிடுகிறது.
2 .இரண்டாவது முகம் தனது பக்தர்களுக்கு அருள் ஆசிகளை கருணையுடன் அருள்கிறது .
3 . மூன்றாவது முகம் தர்மத்தை பாதுகாத்து பாரம்பரியத்தை பேணுகிறது.
4. நான்காவது முகம் உலகை ஆளும் மாய அறிவும், ஞானமும் அருள்கிறது.
5. ஐந்தாவது முகம் எதிர்மறைகளில் இருந்து மக்களை பாதுகாக்கிறது.
6.ஆறாவது முகம் அனைத்து பக்தர்களிடமும் அன்பும் கருணையும் அருள்கிறது.
நாள் என் செயும், வினைதான் என் செயும், எனை நாடி வந்த
கோள் என் செயும், கொடும் கூற்றென் செயும், குமரேசர் இரு
தாளும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும்,
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38
#கந்தர்அலங்காரம்
கற்றதன் பலன் கந்தன் கழலடிக்குத் தன்னை அர்ப்பணம் செய்வதே.
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி.
" யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே ".( பாடல் 17.)
யாம் ஓதிய கல்வியும் ... நாம் கற்று உணர்ந்த கல்வி அறிவும்,
எம் அறிவும் ... நமக்கு இயற்கையாகவே அமைந்த உண்மை அறிவும்,
தாமே பெற ... தாமே திரும்பப் பெற வேண்டி,
வேலவர் தந்ததினால் ... வேலாயுதக் கடவுள் நமக்குக்
கொடுத்ததினால்,
பூ மேல் ... இப் பூமியில்,
மயல் போய் ... நீங்கள் மயக்கங்களை விட்டு,
அற மெய்ப் புணர்வீர் ... தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து
வாழும் உத்தம சீலர்களே,
இனி நா மேல் நடவீர் நடவீர் ... நம்மை அவனுக்கு அர்ப்பணித்து
அவனுடைய புகழைச் சொல்லிச் சொல்லிப் பாடுங்கள்.
நாம் கற்ற கல்வியும், நம்மிடம் இயல்பாகவே அமைந்த மெய்ஞானமும்
தாமே திரும்பப் பெற முருகப் பெருமான் கொடுத்து அருள் செய்ததால்
அதற்குக் கைமாறாக அவனுக்கு நமது புலமையை அர்ப்பணம்
செய்யவேண்டும்.
முருகா சரணம்...





No comments:
Post a Comment