அனைவருக்கும் வணக்கம்...
என்னுடைய பதிவுகளில் அரசியலோ, சினிமாவோ அல்லது சமுகம் சார்ந்த பிரச்சினைகள் சார்ந்தோ எதுவும் இருக்காது....ஏன்னெனில் இதுவரை அவ்வாறு எதுவுமே எழுதியது இல்லை.....இனியும் எழுதுவேனா என தெரியவில்லை 😕😕.... எழுத கூடாது என்று இல்லை ..எழுத தெரிவதில்லை...(....😢 )
ஆனால் இப்பொழுது நாடு முழுவதும் உள்ள எழுச்சியை காணும்போது பெரும் வெள்ளத்தில்...ஒரு துளியாவது நாமும் சேர்க்க வேண்டும் என்ற அவாவில் தான் இப்பதிவு...
இங்கும் நான் எனது கருத்துகளையோ....மற்றவரின் எண்ணங்களையோ பகிரவில்லை...
விக்கிபிடியாவில் கிடைத்த ஏறுதழுவல் நிகழ்வின் வரலாற்றையே பகிர்கிறேன்..இவை அனைவரும் அறிந்தது என்றாலும் நம் மரபை வாசிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது....
ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு)
என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.
பெயர்க்காரணம்
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.
வகைகள்
சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.
வேலி ஜல்லிக்கட்டு -
வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.
வாடிவாசல் ஜல்லிக்கட்டு -
மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
வடம் ஜல்லிக்கட்டு -
வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
வரலாறு
ஏறுதழுவலை சித்தரிக்கும் ஒரு கல்வெட்டு
பழந்தமிழ் இலக்கியங்களிலும், சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் 'கொல்லேறு தழுவுதல்' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்
சங்க இலக்கியமான கலித்தொகை
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்.
என்றுரைக்கிறது.
அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை:
". கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்" என்பதாகும்.
பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.
இத்தகைய மரபை காக்க ( ஒற்றுமையாக, அமைதியாக ) போராடும் நம் இனத்திற்கு வாழ்த்துக்கள்...

இந்த அறப்போராட்டம் பல விசயங்களிலும் தொடர வேண்டும்...
ReplyDeleteநிறைய தெரியாத விஷயங்கள். தொகுத்துத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதஞ்சாவூர் பக்கமெல்லாம் மஞ்சு விரட்டு தான்!..
ReplyDeleteமாட்டுப் பொங்கலன்று மாலையில் ஊர்த் திடலில் கூடி பொங்கலிட்டு பூஜை செய்து மாடுகளை விரட்டி விட்டு துரத்திக் கொண்டு ஓடுவது கிடைத்தற்கரிய மகிழ்ச்சி..
அதிலும், அந்தப் பக்கம் இந்தப் பக்கம் - கூடப் படிக்கும் பொண்ணுகள் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம்!..
ம்.. இனிமேல் அந்த மகிழ்ச்சியெல்லாம் வருவதற்கு வாய்ப்புகளே இல்லை!..
நல்ல விஷயங்களுடன் இனிய பதிவு.. வாழ்க நலம்!..
நண்பர் திரு துரை செல்வராஜூ அவர்களின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன். முதலில் தஞ்சையில் மஞ்சு விரட்டு கண்டதுண்டு. பின்னர் 25 வருடங்களுக்கு முன்பு என் மதுரைக் காலங்களில் பாலமேடு ஒருமுறை சென்று மயிரிழையில் தப்பியதுண்டு!
ReplyDeleteநல்ல தொகுப்பு. நன்றி.
ReplyDeleteநீங்கள் சொல்லுவது போல் அறிந்த தகவல்கள் என்றாலும் மீண்டும் வாசிக்க கிடைத்தமைக்கு மிக்க நன்றி சகோ/அனு...நல்ல தொகுப்பு...
ReplyDelete