தொடர்ந்து வாசிப்பவர்கள்

24 April 2017

சுவாமி இராமானுஜர் 1௦௦௦ ஆம் ஆண்டு....ஸ்ரீமதே ராமானுஜாய நம:

சுவாமி  இராமானுஜர் 1௦௦௦ ஆம் ஆண்டு....1௦17ம் ஆண்டு அவதரித்து, 1137 ம் ஆண்டு வரை, 12௦ ஆண்டுகள் வாழ்ந்திருந்த இவர் ஸ்ரீ வைஷ்ணவ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்திற்குத் தூண் போன்றவர்....வரும்  ஹேவிளம்பி  ஆண்டு சித்திரை மாதம்  திருவாதிரை(1.5.2017)  அன்று இவர் அவதரித்து 1௦௦௦ ஆண்டுகள் நிறைவேறுகின்றன......
அதனால் எங்கும் அதற்கான உற்சவங்களும், விழாக்களும் நடைப் பெறுகின்றது...

சுவாமியை பற்றி எழுதும் அளவிற்கு அடியவளுக்கு அறிவு போதாது..ஆனாலும் பெருங்கடலில் சிறு துளி யாக வேணும் கலக்க வேண்டும்   என்ற ஆசையாலே இந்த முயற்சி...இந்த ஆயிரமாம் ஆண்டு சிறப்பில் அடியவளின்  மிக மிக சிறிய  பங்களிப்பு இது ...

இங்கு பதிவதன் வாயிலாக நானும் சுவாமியை  பற்றிய  பல புதிய செய்திகளை அறிந்து கொள்கிறேன்...தெரிந்து கொள்கிறேன்...புரிந்து கொள்கிறேன்...

சுவாமியை பற்றி மிக மிக  சிறிய அளவிலே  அறிந்து இருப்பினும்...இந்த ஆயிராமம் ஆண்டில்..அவரை  பற்றி தெரிந்து இருப்பதே   பெரும் பாக்கியமாக  நினைக்கிறேன்....

அவ்வாறு  நான் அறிந்த சிலவற்றை வரும் பகுதிகளில் பகிரும் ஆவல் உள்ளது...அதில் ஏதும் பிழை இல்லாமல் எழுத சுவாமியே அருள் புரியவேணும்....
இந்த வருடம் வாங்கிய காலண்டரில் சுவாமியின் வரலாறு அழகான படங்களுடன் வெளிவந்து இருந்தது...அதையும் பயன்படுத்தி இணையத்தில் கிடைத்த படங்களையும், செய்திகளையும் கொண்டே இந்த பதிவுகளை படைக்கிறேன்....பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த

பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்

தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்

வாழநெஞ்சே நாம்மன்னி! சொல்லு வோமவன் நாமங்களே.


  -திருவரங்கத்தமுதனார் அருளிய இராமாநுச நூற்றந்தாதி

(2791)
விளக்க உரை


 மலர்மேல் மங்கை என்றும், பத்மே ஸ்திதாம் என்றும் கூறுவதற்கு ஏற்றபடி தாமரைமலரைத் தனது இருப்பிடமாகக் கொண்டவள் பெரியபிராட்டி ஆவாள்.

அப்படிப்பட்ட அவள் - அகலகில்லேன் இறையும் - என்று நித்யவாசம் செய்யும் திருமார்பை உடையவன் பெரியபெருமாள் ஆவார் .

 இந்தப் பெரியபெருமாளின் திருக்கல்யாண குணங்களின் மூலம் ஏற்பட்ட அனுபவத்தினால் திருவாய்மொழியை அருளிச்செய்வதில் மட்டுமே நிலைநின்றவர் நம்மாழ்வார் ஆவார்.

 அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளை அண்டி நின்று, அவற்றின் மூலம் மட்டுமே வாழ்ந்து வருபவர்; பலவகையான சாஸ்த்ரங்கள் கற்றுச் சிறந்து விளங்கும் கூரத்தாழ்வான், கோவிந்தர், தாசரதி போன்றோரும் சாஸ்த்ரங்களை நன்றாகப் பயின்றும் அவற்றை விரோதித்து நின்ற யாதவப்ரகாசர், யஜ்ஞமூர்த்தி போன்றோரும் தன்னிடம் வந்து நிலையாக இருக்கும்படி உள்ளவர் - இப்படிப்பட்ட எம்பெருமானாரின் திருவடிகளை, அவை மட்டுமே நமக்கு உபாயம் என்று அறிந்த நாம், அவற்றை நிலையாகப் பற்றி வாழ வேண்டும். இதற்கு என்ன வழி என்றால் -

 எனது நெஞ்சமே! அந்த உடையவரின் திருநாமங்களை எப்போதும் இடைவிடாமல் கூறியபடி இருப்பதே ஆகும்


தொடரும் ....


அன்புடன்

அனுபிரேம்..
5 comments:

 1. நல்லதொரு தொடக்கம் தொடர்கிறேன்

  ReplyDelete
 2. தெரியாத பல விசயம் தெரிந்துகொண்டேன்..

  ReplyDelete
 3. ஸ்ரீ ராமானுஜர் பற்றிய செய்திகள் அருமை..

  ReplyDelete
 4. தினமலரில் படித்து வந்தேன், இடையில் தடைபட்டு விட்டது, இப்போது உங்க்கள் தளத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சி.

  ReplyDelete
 5. இராமானுஜர் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.....தொடர்கிறோம்...

  ReplyDelete