தொடர்ந்து வாசிப்பவர்கள்

11 April 2017

உலகின் பெரிய லிங்கம்... தஞ்சைப் பெரிய கோயில் (4)


வாழ்க வளமுடன்


அனைவருக்கும் வணக்கம்...

முந்தைய பதிவில்

தஞ்சைப் பெரிய கோயிலை. . பற்றியும்,

அழகு நந்தி யையும்,...

வானளாவிய கோபுரத்தையும்,... ரசித்தோம்...

இன்று  உலகின் பெரிய லிங்கத்தை காணலாம்....
உலகின் பெரிய லிங்கம்


பெரிய சிவலிங்கம்  - சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும்..... 13 அடி உயரம்!

நந்தி மண்டபத்தைக் கடந்ததும் கோவிலின் முக மண்டபம் ..... நடுவிலும், இரு புறமும் இருக்கும் படிகளின் வழியே  சென்று மண்டபத்தை அடைய வேண்டும்......
மண்டபத்திலிருந்து கோவிலின்  அழகு...நடு மண்டபத்தில்  உள்ள  சிற்பங்கள்...
இதற்கு மேல் படம் எடுக்க அனுமதி இல்லை....ஆனாலும் அவ்விடத்தின் பிரமாண்டமும், குளிர்ச்சியும் என்றும் நினைவில் இருக்கும்....


அங்கிருந்து வரிசையில் நின்று சிவனை தரிசிக்க வேண்டும்...

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியதாகும்.

ஆறு  அடி உயரமும்,  54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார்,
13 அடி உயரமும் 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனிக்   கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப் பட்டுள்ளது.


நாம் தரிசனத்துக்கு செல்லும் போது, நம் பார்வையில் படுவது லிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.அபிஷேக, ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தஞ்சைக் கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் செய்யப்படுகிறது. இக்கோயிலில் தினமும் காலை  பூஜை, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன.

சிவலிங்கத்தைச் சுற்றி வர கருவறையைச் சுற்றி இடமும் உள்ளது. அதில் சோழர்கால ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன.


 இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும்.
 ஒன்பது அடி உயரமுடைய அம்மன்.... பெரியநாயகி ...


       ...    நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்கின்றாள். ..அழகிய திருமுகம்....மிக அதிக வேலைப்பாடுகள் உள்ள சிறப்பான மண்டபம்...

வெளிமண்டபத்தின்   அழகு சிற்பங்கள்
மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கு சன்னதி உள்ளது. கருவூர் சித்தர் இப்பகுதியில் தியானத்தில் இருந்துள்ளார். இவரது அறிவுரைப்படியே ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.
மேலும்   ராஜராஜன் , கருவூர்த்தேவருடன்  காட்சியளிக்கும் ஓவியம் உள்பட பல ஓவியங்களும் உள்ளன. இவை அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையான சிறப்பு வாய்ந்தவை.


Rajaraja_mural-2
இணையத்திலிருந்து

 தொடரும்...அன்புடன்..

அனுபிரேம்7 comments:

 1. கண்னுக்கு அழகான படங்களுடன் இனிய பதிவு..

  வாழ்க நலம்..

  ReplyDelete
 2. அழகிய படங்கள். எனக்கு மிகவும் பிடித்த சிவலிங்கம்...
  பாரதியார் வசனம் சூப்பர்.

  ReplyDelete
 3. அழகின படங்கள் நன்று நன்றி

  ReplyDelete
 4. அழகிய படங்க்களுடன் அழகிய பதிவு.
  தஞ்சை கோபுரத்தின் உள் புற சுவற்றில் மூலிகைகாளால் ஆன
  ஓவியங்கள் இருக்கிறது. முன்பு பெரிய அரசாங்க அதிகாரிகளுக்கு , முக்கியமானவர்களுக்கு காட்டுவார்கள். அப்போது போய் பார்த்து இருக்கிறேன்.
  (சாரின் அண்ணன் அழைத்து போய் காட்டினார்கள்.)
  கோபுரத்தின் உள் தோற்றம் கீழ் இருந்து பார்க்க அழகாய் இருக்கும். குரு சன்னதி பக்கம் ஒரு வழி இருக்கிறது.

  ReplyDelete
 5. அனு செம படங்கள்!!! தகவல்கள் அருமை!! படங்கள் சூப்பார்ப்...இந்த தடவை ரொம்பவே அழகா க்ளியரா இருக்கு...பாராட்டுகள் அனு...

  கீதா

  ReplyDelete
 6. அனு செம படங்கள்!!! தகவல்கள் அருமை!! படங்கள் சூப்பார்ப்...இந்த தடவை ரொம்பவே அழகா க்ளியரா இருக்கு...பாராட்டுகள் அனு...

  கீதா

  ReplyDelete
 7. அழகிய படங்களுடன் பதிவு அருமை
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete