தொடர்ந்து வாசிப்பவர்கள்

13 April 2017

அழகு கலை சிற்பங்கள்..... தஞ்சைப் பெரியகோயில்( 5)வாழ்க வளமுடன்....


அனைவருக்கும் வணக்கம்...

முந்தைய பதிவில்

தஞ்சைப் பெரிய கோயிலை. . பற்றியும்,

அழகு நந்தி யையும்,...

வானளாவிய கோபுரத்தையும்,...

உலகின் பெரிய லிங்கத்தையும்   ரசித்தோம்...

இன்று அங்கு உள்ள அழகு கலை சிற்பங்களின் அழகை    காணலாம்....
ராட்சத மதில்சுவர்

கோயிலை சுற்றி சுமார் 28 அடி உயரத்தில் அமைந்துள்ள மதில் ராஜராஜனின் தலைமை அமைச்சரான  மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால் மன்னனின் ஆணைப்படி கட்டப்பட்டது. மதிற்சுவர் மீது வரிசையாக நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.....
இம்மதிற்சுவரின் வெளிப்புறத்தின் கீழ்பகுதியில் சோழர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்காக 800 அடி நீளமும், தெற்கு வடக்காக 400 அடி அகலமும் கொண்டுள்ளன. கோயிலின் பிரகாரச் சுற்றில் கருங்கற்களினாலும், செங்கற்களினாலும் தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி கி.பி 1803ல்  தளம் அமைத்தார்.....கோவிலின்  வெளிப்பிரகாரத்தை சுற்றிலும் உள்ள மண்டபத்தில்  சிவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன....
கோவின் வெளிப்புறம் உள்ள அகழி ....பழைய தோற்றம்...

இப்பொழுது  சீரமைப்புப் பணியில்...
பாரம்பரியச் சின்னம்...


இக்கோயிலை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கான காரணங்கள்....

1.பொதுவாக பெரிய கோயில்களை பலகாலம் பல மன்னர்கள் கட்டுவர் ஆனால்  ராஜராஜன் ஒருவனாலேயே எழுப்பப்பட்ட முழுமையான பிரம்மாண்ட கோயில் இது.

2. ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் அமைந்த திருக்கற்றளி கோயிலாக அமைந்தது. (கற்களால் ஆன கோயில்களைக் கற்றளி என்பர்)

3. கருவறைக்கு மேலே உயரமான விமானம் அமைத்தது மாறுபட்ட அமைப்பாக இருந்தது.

4. புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.

5. ராஜராஜசோழன், தானே கோயில் கட்டியதற்கான ஆதாரத்தை கல்வெட்டில் பொறித்ததோடு மட்டுமல்லாமல், எந்தெந்த வகையில் பொருள் வந்தது என்பதையும், கோயிலுக்கு யார் யாருடைய பங்களிப்பு, கும்பாபிஷேகம் நடத்திய வரலாறு ஆகியவற்றை கல்வெட்டில் பொறித்துள்ள தகவல்கள்.

6. கற்றளியால் அமைந்த விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டது.

7. தஞ்சைப் பெரிய கோயில் ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. இது தமிழக வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டகமாகத் திகழ்கிறது.

.

இத்தகைய சிறப்பான கோவிலை கண்டு ரசித்து....உங்கள் பார்வைக்கும் கொடுத்தமையில்   மிகவும் மகிழ்ச்சி...


தொடர்ந்து உற்சாகம் கொடுத்த நட்புகளுக்கும் நன்றி...மீண்டும் சந்திப்போம்....


அன்புடன்

அனுபிரேம்....6 comments:

 1. படங்கள் மிகவும் தெளிவு எடுத்தவருக்கு ஒரு சபாஷ்

  ReplyDelete
 2. அழகிய படங்கள். தகவல்களும் சிறப்பு. பாராட்டுகள்.

  ReplyDelete
 3. தஞ்சை சுற்றுலா அழகிய படங்களுடன் மனதைக் கவர்ந்தது..

  வாழ்க நலம்..

  ReplyDelete
 4. தஞ்சைக்கு பலமுறை வந்திருந்தாலும் இவ்வளவு விஷயங்களை உங்களால் அறியச் செய்தமைக்கு நன்றி..படங்கள் அருமை.

  ReplyDelete
 5. சகோதரி/அனு, படங்களும் தகவல்களும் அருமை...

  கீதா: உங்க குழந்தைகள் உங்களை மாதிரியே இருக்காங்க...கோயிலின் சிற்பங்கள் ரொம்பவே அழகாக வியக்கும் வகையில் இருக்கு...

  ReplyDelete