அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்
நாமக்கல்
நாமகிரி என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது.
இத்தகைய நாமக்கலின் நடுவில் மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் ..நமது ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் ....உள்ளது...
தலச்சிறப்பு :
நாமக்கலில் சுமார் 18 அடி உயரம் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் .... தொழுத கைகளுடனும்,ஜெப மாலையுடனும் ... இடுப்பில் கத்தியுடனும் இருக்கும் திருக்கோவில் ...
இங்கு உள்ள ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பு.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து ஒரு நீர் நிலை அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவம் இயற்றினாள்.
திரேதா யுகத்தில் இராமவதாரத்தில் இராவணனால் வாரை சேனைகளும், இராமரும் மூர்ச்சையடைந்தனர்.
அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் வாயு பகவானின் உதவியுடன் சிரஞ்சீவி மலையை பெயர்த்து வந்து சஞ்சீவி மூலிகைகளால் எழுப்பி விட்டு, பழையபடி சஞ்சீவி மலையை வைத்து விட்டு திரும்பினார்.
அப்போது நேபாளத்தில் கண்டகி நதியில் ஓர் சாலிக்கிராம மலையை பார்த்தார், அதில் ஸ்ரீ நரசிம்மர் ஆவிர் பவித்திருப்பதை கண்ட அனுமான் சாலிக்கிராம மலையை வழிபாட்டிற்காக பெயர்த்தெடுத்து ஆகாய மார்க்கமாக இலங்கை நோக்கி பயணித்தார்.
சூர்யோதய காலம் நெருங்குவதை கண்ட அனுமான் அனுஷ்டானம் செய்ய தீர்மானித்து மகாலட்சுமி தவம் செய்யும் நீர் நிலைகள் அடங்கிய அந்த இடத்தில் வைத்து விட்டு அனுஷ்டானம் செய்தார். திரும்பி வந்து எடுக்க முயன்ற அனுமனால் அதை அசைக்கக் கூட முடியவில்லை.
அப்பொழுது ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி ஆஞ்சநேயருக்கு அருள் பாவித்து ராமர் கைங்கரியத்தை முடித்து ராமாவதாரத்திற்கு பின்பு இங்கு பணியாற்றுமாறு உத்தரவிட்டார்.
வடமாலை சாத்துவதன் காரணம் :
முன்பு ஒரு சமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள்.
பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்தி படுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும் செய்த வடமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி ராகு இவர்களுடைய இடையூறில் இருந்து மனிதர்கள் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துகிறார்கள்.
மிக எளிமையான சன்னதி......ஆனால் உள்ளம் கவர் ஆஞ்சநேயர் ....
மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் அழகிய கோவில்....
அன்புடன்
அனுபிரேம்..

இணையத்திலிருந்து |

சனிக்கிழமை. ஆஞ்சநேய தரிசனம். நன்று.
ReplyDeleteதலவரலாறும், படங்களின் அணிவகுப்பும் அருமை.
ReplyDeleteஆகா.. அருமை.. புரட்டாசி சனிக்கிழமை அதுவுமாக இனிய தரிசனம்..
ReplyDeleteஆஞ்சநேயர் படங்களை இணையத்திலிருந்து எடுத்திருக்கின்றீர்கள்..
நீங்கள் ஆஞ்சநேயரைப் படமெடுக்கவில்லையா?..
அல்லது படம் எடுக்க அனுமதிக்கவில்லையா?..
வாங்க ஐயா...
Deleteஅங்கு எடுக்க கூடாதுன்னு எல்லாம் எதுவும் சொல்லவில்லை....
ஆன பொதுவாக நான் கோவிலின் மண்டபங்கள் வரைக்கும் தான் படம் எடுப்பது....
இறைவன் அருகில் செல்லும் போது காமெராவை மூடி வைத்துவிட்டு...
இறைவனை மட்டுமே நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்...
அக கண்ணில் அவனை நிறைக்க வேண்டும் என்ற சிறிய அவா...
நாமக்கல் முன்பு நிறைய தடவை சென்றதுண்டு. இப்போதுதான் சென்று கொஞ்ச நாள் ஆகிவிட்டது....மிகவும் பிடித்த ஆஞ்சு!!! சனிக்கிழமை இன்று தரிசனம் கண்டது மகிழ்ச்சி!!
ReplyDeleteகீதா
சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இந்த கோயிலுக்கு சென்று இருக்கிறேன். அந்தநாள் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteஅருமையாக இருக்கு. எனக்கு ஆஞ்சநேயரை ரொம்பப் பிடிக்கும். ஆனால் இலங்கையில் ஆஞ்சனேயர் அறிமுகமாகி ஒரு 20, 30 வருடங்களுக்குள்தான் இருக்கும் என நினைக்கிறேன்.. எனக்கு விருப்பம் வந்து நான் வணங்கத் தொடங்கியது ஒரு 6,7 வருடங்களாகத்தான்..
ReplyDeleteஆனா இப்படங்களில் வரும் ஆஞ்சனேயரின் முகம் சாந்தமாக இல்லையே...
வாங்க அதிரா....
Deleteஇந்த அனுமன் மிக பக்தியாக ..கண்களை முழுதும் திறந்து நிற்பதால்...உங்களுக்கு அவர் சாந்தமாக இருப்பது போல் தோன்றவில்லை போலும்...
நீங்கள் சொன்ன உடன் உற்று பார்த்தால்...அவரின் வழக்கமான புன்னகை இல்லாமல்...மிக தீவிரமாக இருப்பது போல் தான் தோன்றுகிறது...
ஆனாலும் ரொம்ப பிரீன்ட்லி ஆன அனுமன்...ரொம்ப பிடிக்கும்..
பல ஆண்டுகளுக்கு முன இக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
படங்கள்அருமை
அழகான படங்களும் தகவல்களும். நன்றி அனு!
ReplyDelete