மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, மாசி மக தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர்.
ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல்வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது.
மாசி பௌர்ணமி ( மாசி மகம் ) - காலை - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி கருட வாஹனத்தில் எழுந்தருளி, வங்கக் கடலில் தீர்த்தவாரி
சென்னையில் கடற்கரையெங்கும் பல இடங்களில் அனைத்துக் கோவில் திருமூர்த்தங்களும் இங்கு எழுந்தருளுகின்றனர். பெருமாளுடன் சக்கரத்தாழ்வாரும் கடற்கரைக்கு எழுந்தருளுகின்றார். பெருமாள் கடலுக்குள் சென்று வந்த பிறகு சக்கரத்தழ்வார் கடலில் தீர்த்தவாரி கண்டருளுகின்றார்.
மாசி மகம் - மாலை - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி - சேஷ வாஹன புறப்பாட்டுக்கு, பரமபதநாதன் திருக்கோலத்தில் வாஹன மண்டபம் எழுந்தருளல்...
மாசி பௌர்ணமி ( மாசி மகம் ) - மாலை - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி - சேஷ வாஹன புறப்பாடு
முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...
பெரிய திருமொழி - இரண்டாம்பத்து
மூன்றாம் திருமொழி – வில் பெரு விழவும்
1068
வில் பெரு விழவும், கஞ்சனும் மல்லும்,
வேழமும், பாகனும் வீழ *
செற்றவன் தன்னை * புரம் எரி செய்த
சிவன் உறு துயர் களை தேவை *
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை *
சிற்றவை பணியால் முடி துறந்தானை
திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)
1069
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவர் விழுங்கும் *
கோதில் இன் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும் *
ஆதியை அமுதை என்னை ஆளுடை
அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் * மாட மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)
ஓ திரு அல்லிக் கேணியிலும் கொண்டாடப்படுகிறதா...நான் சென்னையில் இருந்திருந்தாலும் இப்போதுதான் தெரிகிறது அனு.
ReplyDeleteகீதா
பெரும்பாலும் அனைத்துக் கோவில்களிலும் மாசி மகம் தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது அக்கா ..
Deleteபடங்கள் எல்லாம் அருமை..
ReplyDeleteகீதா
நன்றி அக்கா ..
Delete