19 February 2022

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் (மாசி மகம்) தெப்பத்திருவிழா

 திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் ...





மந்திர உபதேசம் வேண்டி சுவாமி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான். உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை சுவாமி ராமானுஜர் உபதேசித்ததால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு.

 பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். 

பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம். இப்பெருமானை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். 

இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு. 

மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. 

 மாசிமகத்தன்று இங்கு தெப்பத்திருவிழா நடைபெறும். 



























சௌமிய நாராயணரிடம் ஏதாவது வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திரபாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது மரபாகும்.

அதனாலே தெப்பத்  திருவிழா அன்று குளத்தை சுற்றிலும்   ஒளிரும் ...

முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...


பெரிய திருமொழி - ஒன்பதாம் பத்து

பத்தாம் திருமொழி - எங்கள் 


1838

எங்கள் எம் இறை, எம் பிரான், இமையோர்க்கு நாயகன் * ஏத்து அடியவர் 

தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள்புரிவான் * 

பொங்கு தண் அருவி, புதம், செய்யப், பொன்களே சிதற இலங்கு  ஒளி * 

செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே. (2)



1839

எவ்வ நோய் தவிர்ப்பான், எமக்கு இறை, இன் நகைத் துவர் வாய் * நிலமகள் 

செவ்வி தோய வல்லான், திரு மா மகட்கு இனியான் * 

மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை, மாலையொடும், அணைந்த * மாருதம் 

தெய்வம் நாற வரும் திருக்கோட்டியூரானே.



1840

வெள்ளியான் ,கரியான், மணி நிற வண்ணன் விண்ணவர்-தமக்கு இறை * எமக்கு 

ஒள்ளியான், உயர்ந்தான், உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் * 

துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்து அசை * 

தெள்ளு நீர்ப் புறவில் திருக்கோட்டியூரானே.



திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள்  ஸ்வாமி திருவடிகளே சரணம் ....

அன்புடன் 
அனுபிரேம் 


3 comments:

  1. கோயிலுக்குச் சென்றுள்ளேன். ஆனால் விழாவிற்கு சென்றதில்லை. விழாப்பகிர்வு சிறப்பு.

    ReplyDelete
  2. சிறப்பான தகவல்கள். படங்களும் அழகு குறிப்பாக மின் விளக்குகள் ஒளிரும் தெப்பக்குளம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete