சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்...
மாசி பிரமோற்சவம் - 5 ஆம் திருநாள் காலை நாச்சியார் திருக்கோலம்
முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...
பெரிய திருமொழி - இரண்டாம்பத்து
மூன்றாம் திருமொழி – வில் பெரு விழவும்
1070
வஞ்சனை செய்யத் தாய் உருவாகி
வந்த பேய் அலறி மண் சேர *
நஞ்சு அமர் முலையூடு உயிர் செக உண்ட
நாதனை, தானவர் கூற்றை *
விஞ்சை வானவர் சாரணர், சித்தர், வியந்து
துதி செய்யப் பெண் உருவாகி *
அம் சுவை அமுத அன்று அளித்தானைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே.
1071
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடைசெய் *
மந்திர விதியில் பூசனை பெறாது,
மழை பொழிந்திட, தளர்ந்து * ஆயர்
எந்தம்மோடு இன ஆ -நிரை தளராமல்
எம் பெருமான்! அருள் என்ன *
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
அனுபிரேம்
படங்கள் அனைத்தும் அழகு.
ReplyDeleteபடங்கள் செம அனு..
ReplyDeleteகீதா