பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை .
1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025
3.நபயௌவன (புதிய இளமை) தரிசனம்
26 ஜூன் 2025, வியாழக்கிழமை இன்று ....
பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் தரிசனத்தின் 14 ஆவது நாளான இன்று காலை 8 மணிக்குச் "சிங்க துவார் " திறக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஸ்ரீ நாராயண் பதிக்கு மங்கல ஆரத்தி - அனாபஸார கால நிறைவு தரிசனம்.
ஜெய் ஜெகநாத்!
"அனாபஸார காலம்!"
பூரியில் மிக முக்கியமான காலம் இந்த அனாபஸார/அனாவஸார காலம் எனப்படும் பதினான்கு நாள்கள் ஓய்வு!
ஜ்யேஷ்ட (ஆனி) பௌர்ணமி அன்று ஸ்ரீ ஜகந்நாதன், ஸ்ரீ பலராமன், ஸ்ரீ சுபத்திரா மூவரும் 108 குடங்கள் தீர்த்தத்தில் திருமஞ்சனம் கண்டருள்வார்கள்.
அதாவது வருடத்தில் ஒரு முறை கோவில் கர்பக்ருஹத்தில் உள்ள மூல விக்ரஹங்கள் வெளியில் வந்து ஸ்நான வேதிகையில் நீராடலே "ஸ்னான யாத்திரை" எனப்படுகிறது.
நிறைய நேரம் தண்ணீரில் விளையாடிக் குளித்ததில், மூவருக்கும் ஜலதோஷம், ஜுரம் போன்றவை வந்துவிடுகின்றன.
அதனால் ஜுரமருந்து, ஜலதோஷ மருந்து எல்லாம் கொடுத்து, விசேஷ கஷாயம் கொடுத்து, ஸ்ரீ பலராமன், ஸ்ரீ சுபத்திரா, ஸ்ரீ ஜகந்நாதனை தனியாக ஒரு இடத்தில் ஓய்வாக இருக்கவைப்பர்!
அந்த சமயத்தில் பழச்சாறு, மருந்து கஷாயம் மட்டுமே பகவானுக்கு நிவேதனம் செய்யப்படும்!
இந்த இரண்டு வாரங்கள் பகவானை யாரும் தரிசிக்க இயலாது!
இந்த சமயத்தில் உலகெங்கிலும் உள்ள ஸ்ரீ ஜகந்நாத பக்தர்கள், தங்கள் வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதனின் மூர்த்திகள், ஸ்ரீ ஜகந்நாதன் படங்கள் ஆகியவற்றை வெள்ளைத் துணியிட்டு மூடி வைப்பார்கள்!
ஆஷாட (ஆடி) அமாவசை வரையிலான இந்த பதினான்கு நாள்கள், பக்தர்களுக்குக் கோயிலில் தரிசனம் அனுமதியில்லை.
ஆஷாட (ஆடி), சுக்லபக்ஷ வளர்பிறை, பிரதமை (முதல்நாள்) கோவில் திறக்கப்படும். ஸ்ரீ ஜகந்நாதன்,ஸ்ரீ பலராமன், ஸ்ரீ சுபத்திரா புதுப்பொலிவுடன் காட்சி தருவார்கள். அதற்கு " நபயௌவன (புதிய இளமை) தரிசனம் " என்று ஊரே வந்து தரிசித்துக் கொண்டாடும்!
அதற்கு அடுத்த நாள் ஸ்ரீ பலராமன், ஸ்ரீ சுபத்திரா, மூவரும், கோயிலைவிட்டு வெளியில் வந்து பக்தர்களுக்காக ரதயாத்திரை கண்டருள்வார்கள். அதுதான் உலகில் பிரசித்தி பெற்ற "பூரி ஜெகந்நாத ரத யாத்திரை!"
இந்த வருடம் நாளை, (ஜூன் 27 ஆம் தேதி) ரத யாத்திரை!
செஞ்சொல் நான்மறையோர்* தென் அழுந்தையில் மன்னி நின்ற* அஞ்சனக் குன்றம் தன்னை* அடியேன் கண்டுகொண்டேனே*. 5
ஸ்ரீ பலராம ஸ்வாமி , ஸ்ரீ சுபத்ராதேவி, ஸ்ரீ ஜெகந்நாத பெருமாள்
திருவடிகளே சரணம் ... !!!
அன்புடன்
அனுபிரேம் 💖💖💖
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. படங்கள் கண்கள்க்கு அமிர்தமான விருந்து. பூரி ஜெகன்னாதரை தரிசித்து கொண்டேன். கோவிலின் கோபுரங்களின் தரிசனமும் பெற்றுக் கொண்டேன். மூர்த்திகளைப்பற்றிய விபரங்களும் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. இதன் தொடர்ச்சியாக விட்டுப் போன பதிவுகளையும் படிக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.