அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...
வள்ளலே, வள்ளலே, பிள்ளையாரே
வள்ளலே, வள்ளலே, பிள்ளையாரே
விக்னம் தீர்க்கும் விநாயகனே
செல்வம் தருவாய் சித்தம் தருவாய்
தீரா அறிவும் தருவாயகா!
![]() |
உச்சி பிள்ளையார் |
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும்,
பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும்
கிடைக்கும்.


ஒளவையார்
பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை
நாலும்கலந்து உனக்கு நான் தருவேன் -கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
![]() |
மணக்குள விநாயகர் |
ஓம் சக்தி ஓம், வினாயகா
ஓம் சக்தி ஓம், வினாயகா!
உன் அருளால் வாழ்வோம் நாங்கள்!
தாம் சக்தி தந்து துணை புரிவாய்
சாந்தம் நலம் தருவாய் நீயே!
விநாயகர் திருவடிகளே சரணம் ...
அன்புடன்
அனுபிரேம் 💕💕💕
இனிய காலை வணக்கம்.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்....