21 September 2017

அவியல்

வாழ்க நலம்...


அவியல்…



மிக விருப்பமான உணவு....வாங்க பார்க்கலாம்...








தேவையானவை.....



அவரை, கத்தரி, கொத்தவரங்காய், பரங்கி, பூசணி,  சேனை, வாழை, தட்டங்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு……

பச்சைப் பட்டாணி, பச்சை மொச்சை, பச்சைக் காராமணி....

உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட், கோஸ், குடமிளகாய், முருங்கை,….



இந்த காய்களில்    - 4கப்
மஞ்சள் தூள்             – 1 சிட்டிகை

உப்பு                               – தேவையான அளவு
தயிர்                                – 1/2 கப்
தேங்காய் எண்ணை – 4 ஸ்பூன்



அரைக்க...

தேங்காய்     –  1/2 கப்
பச்சை மிளகாய்   – 5 -6
சீரகம்   – 2 டேபிள்ஸ்பூன்



செய்முறை....





காய்களைக் கழுவி, பெரிய  துண்டுகளாக வெட்டி  மஞ்சள் தூள் மற்றும் கொஞ்சம் நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்....






தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை  கரகரப்பாக  அரைத்துக் கொள்ளவும்......





வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையைச் சூடாக்கி,

 கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து

வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது சேர்த்து, கலவை நன்றாக இறுகும்வரை கிளறவும்.


 தயிரையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.

மீதி தேங்காயெண்ணையைச் சேர்த்து கிளறினால் அவியல் ரெடி...





இன்றைய சமையலில் ஏதும் புதுயது இல்லை...வழக்கமான முறை தான்....

அதான் எங்களுக்கு எல்லாம் தெரியமே...பின் ஏன் இந்த பதிவு ன்னு பார்க்கறீங்களா...


அவியல் செய்யும் போது ...சும்மா படங்களை  எடுத்தேன்..பார்க்க ரொம்ப அழகாக வந்திருந்தது....


அந்த படங்களை பகிரவே இன்றைய சும்மா சமையல் குறிப்பு...😁😁😁🙌


அன்புடன்

அனுபிரேம்....



7 comments:

  1. அவியலைப்பார்க்க மிக அழகாய் இருக்கிறது!!

    ReplyDelete
  2. எனக்கு அவியல்ன்னா ரொம்ப பிடிக்கும்ப்பா

    ReplyDelete
  3. கேரளத்துச் சமையல்.. எனக்கு மிகவும் பிடிக்கும்..
    படங்களுடன் பதிவு அருமை..

    ReplyDelete
  4. கேரளத்து அவியல் மிகவும் பிடிக்கும்!!! படங்கள் அழகா இருக்கு!!

    கீதா: தமிழ்நாட்டு அவியல் கொஞ்சம் தளர்வாக தயிருடன் இருக்கும். கேரளத்து அவியல் நீங்கள் செய்திருப்பது போல் இப்படிக் கெட்டியாக தேங்காய் காய்களில் ஒட்டிக் கொண்டு இருக்கும். மஞ்சள் பொடியும் சேர்த்து. தமிழ்நாட்டில் நான் மஞ்சள் பொடி பொதுவாகச் சேர்த்துச் செய்வதில்லை என்று தோன்றுகிறது. ரொம்ப பிடித்த டிஷ். அப்படியே வைத்துக் கொண்டு சாப்பிடுவேன்...அனு...சூப்பரா இருக்கு உங்க ப்ரிப்பரேஷன்..

    ReplyDelete
  5. ///சும்மா சமையல் குறிப்பு.///

    சும்மா சொல்லக்கூடாது.. நீங்க சும்மா எடுத்த படங்களும்.. சும்மா சமைச்ச சமையலும்.. சும்மா இல்ல:) உண்மையாகவே நல்லா இருக்கு:).

    ReplyDelete
  6. கத்தரிக்காய், கோஸ், குடைமிளகாய் போடமாட்டோம்! படங்கள் நாவைக் கவர்கிறது!

    ReplyDelete