15 May 2019

பஞ்சப்பிரகார உற்சவம்

வாழ்க வளமுடன் 





திருவானைக்கா திருத்தலத்தில் நடைபெறும் மண்டல பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக  சக்தி வேறு , சிவம் வேறு அல்ல என்று காட்ட இறைவர் ஜம்புகேஸ்வரர் அன்னை அகிலாண்டேஸ்வரியாகவும் , அன்னை அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரராக எழுந்தருளும் அதியற்புத காட்சி பஞ்சப்பிரகார உற்சவத்தில் நடைபெறும் .


இதுவும்   சித்திரை பௌர்ணமியன்று நடைபெறும் நிகழ்வு ...ஸ்ரீரெங்கத்தில் கஜேந்திர மோக்ஷம் தரித்துவிட்டு, திருவரங்கம்    கோவிலுக்கும் சென்று வலம் வந்துவிட்டு அடுத்ததாக இங்கு வந்தோம் ...என்ன விஷேசம் என்று அறியாமலே ....

அறியாமல் வந்தாலும் சிறப்பான தரிசனம் கிடைத்தது .




 இந்த அலங்காரத்தின் பின்னே சுவையான ஒர் புராண கதை  உள்ளது, ஜம்புகேஸ்வர மகாத்மியம் இதனை மிக அழகாக விவரிக்கின்றது.

ஆதியில் ஒரு நாள் பிரம்ம தேவன் தன் படைப்பு தொழிலை தொடங்கி செய்து வரும் வேளையில் ஓர் அழகான பெண்ணை படைக்கின்றார்.



 அப்படைப்பில் தானும் மயங்கி அவளை மணக்க விரும்புகின்றார்..

 பின் பிரம்ம தேவன் அது தவறென்றும்  தானே உணர்ந்து ,
 தவத்தில் ஈடுபட ஒர் இடம் தேட, புவியில் ஞான க்ஷேத்திரம் ஜம்புகாரண்யம் என்று அழைக்க பெறும் திருவானைக்கா வருகின்றார்.

 அவ்விடம் அவருக்கு பேரமைதி வழங்க ,அங்கேயே ஓர் குளத்தையும் நிர்மானித்து பன்னெடுங்காலமாக தவமியற்றி வரலானார்...

 அவரது தவத்திற்கு மெச்சி இறைவர் கையிலையை விடுத்து ஜம்புகாரண்யம் புறப்பட அன்னையும் வர விருப்பம் கொள்கிறார் .

 இறைவன் அதை ஏற்றார் ஆனால்  , தான் படைத்த பெண்ணையே கண்டு மயங்கிய பிரம்மன் திரிபுவன சுந்தரியான உன்னை கண்டு மயக்கம் கொள்ள மாட்டார் என்று ,  என்ன நிச்சயம் என்று கூறி..

 இதற்கு நாம் நம்மை மாற்றி காட்சி தருவோம் என்று உபாயமும் கூறலானார்.



நீ நானாகவும் நான் நீயாகவும் காட்சி அருளுவோம் என்று கூறி அவ்வாறே காட்சி அளித்தனர். அந்நிகழ்வே   பஞ்சபிராகார உற்சவம் என்று  நடைப்பெறுகின்றது .








இந்நாளில் இறைவரும் அம்மையும் மாலை புறப்பட்டருளி முதல் நான்கு பிரகாரங்கள் ஒசையின்றி எழுந்தருள,  பின்னர் தென்பால் அமைந்த பிரம்ம தீர்த்த கரையில் எழுந்தருளி பிரம்மனுக்கு காட்சியளிக்கின்றனர்.   பின்னர் அங்கிருந்து  புறப்பட்டு ஐந்தாம் பிரகாரம் எழுந்தருளி மறுநாள் காலை திருக்கோவிலை அடைவர்.
























தந்தை தாய்உல குக்கோர்

தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்

பந்த மாயின பெருமான்

பரிசுடை யவர்திரு வடிகள்

அந்தண் பூம்புனல் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

எந்தை என்றடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே

-ஏழாம் திருமுறை



அன்புடன்
அனுபிரேம் 

3 comments:

  1. ஓர் அரிய விழாவினைக் காணும் வாய்ப்பு. நன்றி.

    ReplyDelete
  2. பிரம்மன் மேலே சிவனார் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இயற்றி விட்டார்!!!

    அழகிய படங்கள்.

    ReplyDelete
  3. பஞ்சப்பிரகார உற்சவத்தை தரிசனம் செய்தோம்.
    நன்றி.

    ReplyDelete