28 May 2019

மஹாலக்ஷ்மி கோவில் , ஹளபேடுவாழ்க வளமுடன் 


மஹாலக்ஷ்மி  கோவில் ,தொட்டகட்டவல்லி (Doddagaddavalli) ,ஹளபேடு
முந்தைய பதிவில் இது எங்கே போகும் பாதை என கேட்டு இருந்தேன் ...அது ஹளபேடு  செல்லும் சாலை ...

எங்களது இந்த  பயணம்  இரு நாள் பயணமாகப் பெங்களூரிலிருந்து சிக்மங்களூர் வரை அமைந்தது  .

மிக அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பல கோவில்களைக் காணும் ஆவல்....ஆனால் மிகக் குறைந்த நேரம் என்று எங்கள் பயணம் இருந்தது .

இந்த குறைந்த நேரத்தில் எவ்வளவு காண முடியுமோ அந்த அளவு கண்டு ரசித்தோம் ...இனி வரும் பதிவுகளில் அந்த பயண காட்சிகளும் , அழகிய கோவில் காட்சிகளும் தொடரும் ...


எங்கள் பயணம் காலை 4 மணிக்குத் தொடங்கியது ...

முதலில் நாங்கள் சென்ற கோவில் மஹாலக்ஷ்மி கோவில் ...

ஹளபேடுவில் இருந்து ஒரு அரைமணிநேரப்பயணம்...18 கிமீ தூரத்தில் உள்ளது .

ஹஸன் நகரிலிருந்தும் 16 கிமீ தொலைவில் ... ஹசன்  - பேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.


google maps உதவியுடன் சென்றோம்... ஊரின் உள்ளே செல்லும் பாதையைப் பார்த்த போது ஏதோ தவறாக வந்த எண்ணம் ..ஆனாலும் துணிந்து சென்றோம் ...மிகக் கடைசியாக கடைக் கோடியில் இந்த ஆலயம் அமைதியாக அமைந்து இருந்தது.

வெளிக் கதவுகள் பூட்டி இருந்ததால் ...சிறிது நேரக் காத்திருப்பிற்கு பின் அங்கிருந்த பாதுகாவலர் வந்து கதவுகளைத் திறந்துவிட்டார்.
அவர் தான் இங்கு வழிகாட்டியும் ...மிக அருமையாக பொறுமையாக அனைத்து இடத்தையும் காட்டி விளக்கினார்.

கர்நாடக மாநிலத்தில் பல  ஹொய்சாள கோயில்கள் உள்ளன.

தொட்டகட்டவல்லியில் உள்ள லட்சுமி தேவி கோவில் சத்துஷ்கா  வகை ஹொய்சாள கோவில் .. , நான்கு கோவில்கள் மற்றும் கோபுரங்களுடன், கோபுரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கோபுரங்கள் உள்ளன.

கோயில்களின் எண்ணிக்கை மற்றும் கோபுரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஏககுடா, துலுது, திரிகா, சதுஷ்குகா மற்றும் பஞ்ச்கா ஆகிய பல வகை கோவில்கள் உள்ளன.

மூலவர் சன்னதியின் வாசலின் உச்சியில் சப்த கன்னியர் உருவங்கள்   (தேவியின் 7 வடிவங்கள்) மற்றும் கதவுகளின் இரு பக்கங்களிலும் நாககனி மற்றும் விஷாகாணி (தேவியின் அடிமைகள்) அமைப்பும் உள்ளது.

சன்னதிக்கு பாதுகாப்பாக புட்டா மற்றும் ப்ரேட்டா என்னும்  எலும்புக்கூடு வடிவில் மிக அரிதான சிற்பங்கள் உள்ளன, இது போல்  வேறு எங்கும் இல்லை.

சப்த கன்னியர் கி.பி.1114ல் விஷ்ணு வர்த்தன் ஆட்சியின் போது, குல்லாஹானா ராகுடா  என்ற வியாபாரியும், அவருடைய மனைவி சகஜாதேவியும் இந்த கோவிலைக் கட்டியுள்ளனர் .

ஹொய்சாள கட்டிடக் கலையின் ஆரம்பகாலப் பாணியில்  இந்தக் கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் வழக்கமான ஹொய்சாள கட்டிடக்கலையின் அம்சங்களைக் காண இயலவில்லை. ஹொய்சாள முறைப்படி உயர்ந்த மேடையின் மீது தான் கோவில் எழுப்பப்பட்டிருக்கும். இங்கு அது இல்லை.

மேலும் கோவிலின் சன்னதிகளின் வெளிப்புறங்களில் ஏராளமான சிறிய வடிவ சிற்பங்களை காணலாம். அவையும் இங்கு இல்லை. பெரும்பாலான சன்னதிகள் கோவிலின் வெளிப்புறத்திலேயே அமைந்துள்ளன.


கோலாலம்பூரில் உள்ள மஹாலக்ஷ்மி ஆலயத்தில் உள்ளது போன்ற  மஹா லக்ஷ்மி சிலை இங்குள்ளது. இந்த லக்ஷ்மி தேவி  நின்று  கொண்டு அருள்புரிகிறார்.


 தொடரும்....


அன்புடன்
அனுபிரேம்

8 comments:

 1. படங்களும், விவரங்களும் அருமை.ஹளபேடு என் கணவர் பார்த்து இருக்கிறார்.
  நான் பார்த்தது இல்லை.

  ReplyDelete
 2. கண்டுகொண்டேன்.நன்றி.

  ReplyDelete
 3. வித்தியாசமான சிற்பங்கள். சுவாரஸ்யமான தகவல்கள். எங்கள் குடும்ப வாட்ஸாப் க்ரூப்பில் உறவுகள் சென்று விட்டு வந்து பகிர்ந்த படங்கள் பார்த்து இங்கு செல்லவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.

  ReplyDelete
 4. அழகான இடங்கள் அனு. விவரணங்களும் அருமை. எங்கள் லிஸ்டிலும் இருக்கிறது. பேளூர், ஹளபேடு எல்லாம்...எப்போது பார்க்க முடியுமோ...பங்களூர் டு மைசூர் ரோட்டிலேயே நிறைய இருக்கு.எனக்கு சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி தலைக்காட் போக ஆசை.....பல்முரி ஃபால்ஸ் முன்பு ஒரு முறை சென்றதுண்டு இருந்தாலும் இப்போது மீண்டும் காண ஆசை...பார்ப்போம்..

  கீதா

  ReplyDelete
 5. இங்கு சென்றிருக்கிறேன். தகவல்களுடன் மிக அருமையான படங்கள்.

  ReplyDelete
 6. எலும்புக்கூடு வடிவிலான சிற்பங்கள் வியப்பாக உள்ளன.

  ReplyDelete
 7. அழகிய வேலைப்பாடுகள். அருமையான தகவல்கள்.எலும்பு கூடு சிற்பம் வித்தியாசமாக இருக்கு.

  ReplyDelete