![]() |
திருச்சி மலைக்கோட்டை 273 அடி உயரம் கொண்டது. இந்த மலைப் பாறைகள் சுமார் 230 கோடி ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது என்கிறது வரலாறு.
மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்துள்ளது.
அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் சந்நிதி உள்ளிட்ட பகுதி முதல் நிலை. மட்டுவார் குழலம்மை சமேத ஸ்ரீ தாயுமானவர் சுவாமி திருக்கோயில் இரண்டாம் நிலை. குடைவரைக்கோயில், உச்சி விநாயகர் கோயில் மற்றும் மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலை.
முந்தைய பதிவில் தாயுமானவர் சுவாமி திருக்கோவிலின் வரலாற்றையும் ,அழகையும் தரிசித்தோம். இன்று உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்..
திருச்சி மலைக்கோட்டை 7 ம் நூற்றாண்டில் பல்லவ நாட்டை ஆண்ட குணதரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.
![]() |
தல வரலாறு :
அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப் பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான். எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான்.
அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.
திரும்பி வந்த விபீஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார். சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த விபீஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான் என்பது வரலாறு.
![]() |
விநாயகர் திருவடிகளே சரணம் ...
அன்புடன்,
அனு பலமாதங்கள் கழித்துதான் வலைப்பக்கம் வருகிறேன்.
ReplyDeleteஉச்சிப்பிள்ளையார் கோயில் படங்களும்.
பாடல் வரிகள் பாடலாக வந்ததை மனப்பாடம் செய்து பாடுவதுண்டு.
எல்லோருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்
கீதா
பல முறை சென்றுள்ளேன். பார்க்கவேண்டிய கோயில்.
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த கோவில். நேற்று மலைக்கோட்டை சென்ற போது கோவில் பூட்டி இருந்தது - வெள்ளி முதல் ஞாயிறு வரை கோவில்கள் மூடப்பட்டு இருப்பதால் பார்க்க முடியவில்லை. மற்ற நாட்களில் ஒரு நாள் சென்று வர வேண்டும் - ஊரில் இருக்கும் நாட்களுக்குள்! பார்க்கலாம்.
ReplyDelete