மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா ...
முதல் நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை
இரண்டாம் நாள் - நாரைக்கு முக்தி கொடுத்த லீலை !
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை ....
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் -உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை ...
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை, பட்டாபிஷேகம்
எட்டாம் நாள் - நரியை பரியாக்கிய லீலை ...
திருவிளையாடற் சுருக்கம் :
பரியை நரியாக்கி வையை அழைத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபதாவது படலமாக அமைந்துள்ளது.
புராண காலத்தில் மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் மாணிக்கவாசகர், தென்னவன் பிரம்மராயன் எனும் சிறப்புப் பெயருடன் அமைச்சராக இருந்தார். படைக்காக குதிரைகள் வாங்க பெரும் பொருளை மாணிக்கவாசகரிடம் அரசர் கொடுத்தனுப்பினார். திருப்பெருந்துறைக்குச் சென்ற மாணிக்கவாசகர் தன்னிடமிருந்த செல்வத்தை அங்குள்ள சிவாலயத் திருப்பணிக்குச் செலவிட்டார்.
குதிரை வாங்கச் சென்ற மாணிக்கவாசகர் திரும்பாதது கண்டு கோபமடைந்த அரசர், அவரை உடனடியாக மதுரைக்கு வருமாறு அழைத்தார். குதிரையின்றி திரும்பிய மாணிக்கவாசகரை அரசர் சிறையிலடைத்தார்.
மாணிக்கவாசகரோ மனமுருகி இறைவனை வேண்டினார்.
மாணிக்கவாசகரின் வேண்டுதலை ஏற்ற இறைவன், சிவகனங்களை குதிரைப் பாகர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் ஆக்கி, மதுரை வந்தடைந்தார்.
குதிரைகளைப் பெற்ற அரசன் மனம் மகிழ்ந்து மாணிக்கவாசகரை விடுவித்தார்.
ஆனால், அன்றிரவே குதிரைகள் நரிகளாகி ஓடிவிட்டன.
இதையறிந்த அரசர் கோபமடைந்து, மாணிக்கவாசகரை ஆற்று சுடுமணலில் கட்டிப் போட்டார்.
ஆனால், இறைவன் திருவருளால் வைகையில் வெள்ளம் ஓடியது.
இதையறிந்த அரசர், இறைவனின் திருவிளையாடலை உணர்ந்து வணங்கி, மாணிக்கவாசகரை விடுவித்ததாக புராணம் கூறுகிறது.
1.094. திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
1021
அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்க முண்மையே. 1.094.8
அரக்கனாகிய பெருவலிபடைத்த இராவணனைக் கால் விரலால் நெரித்தருளிய ஆலவாய் அரன் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை உளதாகும்.
மீனாட்சி அம்மன் திருவடிகளே சரணம் ....
அனுபிரேம்
No comments:
Post a Comment