மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா ...
முதல் நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை
இரண்டாம் நாள் - நாரைக்கு முக்தி கொடுத்த லீலை !
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை ....
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் -உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை ...
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை, பட்டாபிஷேகம்
எட்டாம் நாள் - நரியை பரியாக்கிய லீலை
ஒன்பதாம் நாள் - பிட்டுக்கு மண் சுமந்த கோலம்....
பத்தாம் நாள் - விறகு விற்ற லீலை
பதினோராவது நாள் - சுவாமி அம்பாள் ஒரே சப்தவர்ண சப்பரத்தில் எழுந்தருளல்....
ஆவணி திருவிழா நிறைவு நாள் - அன்னை மீனாட்சி ஆலவாய் அண்ணல் அருள்மிகு சொக்கநாதப்பெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா....
1.094. திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
1024
அடிக ளாலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ், செடிக ணீக்குமே.
ஆலவாயில் எழுந்தருளிய அடிகளாகிய இறைவனது திருவருளில் தோய்ந்த ஞானசம்பந்தனின் அழிவற்ற இனிய இத்தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் போக்குவதாகும்.
மீனாட்சி அம்மன் திருவடிகளே சரணம் ....
அனுபிரேம்
ஆவணி திருவிழா - தொடர்ந்து வெளியிட்ட பதிவுகளுக்கு நன்றி. அம்மையும் அப்பனும் சேர்ந்த காட்சிகள் வெகு அழகு.
ReplyDeleteதொடர்ந்து வந்து ரசித்தமைக்கு நன்றிகள் சார் ...
Deleteதொடர்ந்து வாசித்து வருகிறேன். அம்மையப்பனின் அழகிற்கு இணையேது? கும்பகோணத்தில், குறிப்பாக கும்பேஸ்வரர் கோயிலில் அம்மையப்பனைக் கண்டு லயித்துள்ளேன். இதுபோன்ற பதிவினை எழுதக்கூட இறையருள் தேவை என நினைக்கிறேன். அப்போதுதான் அது மேலும் சிறப்படைகிறது என்பது என் எண்ணம். நன்றி.
ReplyDelete