15 November 2023

பூக்கும் கடம்பா முருகா ...

ஓம் சரவணபவ



 காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்

ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்

கடம்பா முருகா கதிர்வேலா நல்ல

இடங்காண் இரங்காய் இனி. (8)



காக்கக் கடமைப்பட்ட நீ காப்பாற்றாமல் இருத்தால் நான் யாரைப் பரம்பொருளாகக் கொள்வேன். 

ஆறுமுகவா, பூக்கும் கடம்பை அணிந்தவனே, முருகா, கதிர்வேலா, நல்ல இடம் கண்டு இனிமேலாவது இரக்கம் காட்டு.



சிக்கல் அன்னை வேல்நெடுங்கண்ணி உடனமர் அருள்மிகு நவநீதேசுவர சுவாமி திருக்கோயில்.

அருள்மிகு சிங்காரவேலவர் கந்தஷஷ்டி திருவிழாவில் 







 






பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்

கரங்கூப்பிப்க் கண்குளிரக் கண்டு - சுருங்காமல

ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்

பூசையாக் கொண்டே புகல். (9)


நெஞ்சே, பரங்குன்றில் இருக்கும் பன்னிருகைக் கோமானின் திருவடிகளைக் கண் குளிரக் கண்டதனோடு 
விட்டுவிடாமல் திருமுருகாற்றுப்படையை பூசைப் பாடலாகக் கொண்டு சொல்விக்கொண்டே இரு.



முருகா சரணம் !
கந்தா சரணம் !
வடிவேலா சரணம் !





அன்புடன்
அனுபிரேம் 💜💜💛




No comments:

Post a Comment