திருமுருகாற்றுப்படை
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன் .6
முருகா என்னும் பெயரை ஓதுவார் முன், அஞ்சுதலாகிய முகம் தோன்றினால் ஆறுதல் தரும் முகமாக ஆறுமுகம் (முருகன்) தோன்றும்,
துன்பத்தோடு போராடும்போது 'அஞ்சாதே' என்று சொல்லி அதனைக் கொல்லும் வேல் தோன்றும்.
நெஞ்சில் ஒருமுறை நினைத்தால், அவனது இரண்டு அடிகளும் (காவடி - காப்பாற்றும் அடி) தோன்றும்.
நான்காம் படைவீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி் திருக்கோயில்
கந்தசஷ்டி விழாவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸமேத
ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒரு கை முகன்
தம்பியே நின்னுடையே தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான். (7)
முருகனே, செந்தில் முதல்வனே, மாயோனின் மருமகனே, ஈசனின் மகனே, ஒரு கை ஆனைமுகனின் தம்பியே, உன் தண்டை (கழல்) அணிந்த கால்களை நம்பியே எப்பொழுதும் தொழுகின்றேன்.
No comments:
Post a Comment