திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில்... ...
'ஸ்மரணாத் அருணாசலம்' என்பதாக நேரில் சென்று தரிசிக்க முடியாவிட்டாலும் மனதால் நினைப்பதாலேயே முத்தியைத் தரும் திருத்தலம்.
க்ருதயுகத்தில் அக்னி மலையாகவும், த்ரேதாயுகத்தில் மாணிக்க(சிவப்பு) மலையாகவும் த்வாபர யுகத்தில் ஸ்வர்ண மலையாகவும் கலியுகத்தில் கல்மலையாகவும் மாறி மாறி திருக்காட்சி தரும் திருத்தலம்.
இந்த க்ஷேத்ரத்தில் செய்யும் தானம், ஹோமம், ஜபம், தவம் முதலிய அனைத்தும் அளவற்ற பலனை வாரிவழங்கும் என வர்ணிக்கப்படும் திருத்தலம்.
வள்ளால மஹாராஜாவால் கட்டப்பட்ட கோபுரத்தின் மேல் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள முனைந்த அருணகிரி நாதரை, ஸ்ரீ முருகப்பெருமான் காப்பாற்றி 'முத்தைத் தரு' என்று அடியெடுத்துக் கொடுத்த பெருமை மிக்க திருத்தலம்.
ஶ்ரீ அருணகிரி நாதர் ப்ரபுதேவ மஹாரஜனுக்காக ஸம்பந்தாண்டானுடன் வாதம் செய்து கம்பத்தில்(தூணில்) ஸ்ரீ முருகப்பெருமானை எழுந்தருளுவித்த திருத்தலம்.
உடல், உள்ளம், வாக்கு ஆகிய முக்கரணத்தாலும் மனிதன் செய்யும் அனைத்து பாவங்களையும் போக்கடிக்கும் தன்மை அருணாசல க்ஷேத்ரத்துக்கு உண்டு. அக்னி க்ஷேத்ரமாகிய ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஸன்னிதியில் செய்யப்படும் தானங்கள் ஹோமங்கள் ஜபிக்கப்படும் மந்திரங்கள் உடனே ஸித்தியைத் தருவதுடன் அக்ஷய்யமான (அழிவற்ற - அளவற்ற) பலன்களை வாரி வழங்குகின்றன என்கிறது ஸ்ரீ ஸ்காந்தபுராணம்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா ஒன்பதாம் நாள் திருவிழா ----
ஸ்ரீ விநாயகர்- மூஷிக வாகனத்திலும்
ஸ்ரீ அண்ணாமலையார்- இராவணன் வாகனத்திலும்
ஸ்ரீ உண்ணாமுலையம்மை - காமதேனு வாகனத்திலும்
ஸ்ரீ சண்டிகேஷ்வரர்- புலி வாகனத்திலும் எழுந்தருளினர்.
"மருவிய வல்வினைநோ
யவலம்வந் தடையாமல்
திருவுரு வமர்ந்தானுந்
திசைமுக முடையானும்
இருவரு மறியாமை
யெழுந்த தோரெரிநடுவே
பருவரை யுறநிமிர்ந்தான்
பருப்பதம் பரவுதுமே."
- திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள்.
பலபிறவிகள் காரணமாக நம்மைத் தொடரும் வலிய வினைகளின் பயனாகிய துன்பங்கள் நம்மை வந்து அடையாமல் இருக்கத் திருமகளைத் தன் மார்பில் கொண்ட திருமால், நான்முகன் ஆகிய இருவரும் அறியமுடியாதவாறு எழுந்த எரியின் நடுவே பெரிய மலையாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.
திருச்சிற்றம்பலம்.
அன்புடன்
அனுபிரேம் 💕💕
அண்ணாமலைக்கு அரோகரா..
ReplyDeleteஅண்ணாமலைக்கு அரோகரா!..