ஸ்ரீ வில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் மடியில் ஶ்ரீ ரங்கமன்னார் ஸயனத் திருக்கோலம்...
(323)
சித்திரகூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய, அனைத்து உலகும்திரிந்து ஓடி
வித்தகனே! இராமாவோ! நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்.
வனவாசத்தின் போது சித்திரகூட மலையில் சீதாப்பிராட்டியின் மடியில் ஸ்ரீராமபிரான் தலைவைத்து சயனித்திருக்கும் போது,
இந்திரன் மகனான ஜயந்தன் பிராட்டியினழகைக் கண்டு மயங்கி அவளைத் தான் ஸ்பரிசிக்க வேண்டுமென்னும் தீயகருத்தினனாய் தேவவேஷத்தை மறைத்துக் காகவேஷத்தைப் பூண்டு கொண்டு வந்து,
பிராட்டியைத் துன்புறுத்த, பெருமாள் விழித்து காகம் மேல் கோபம் கொண்டு அஸ்திரத்தை வீச, அந்த அஸ்திரத்திலிருந்து தப்பிக்க மூன்று உலகங்களுக்கும் ஓடிப்பார்த்து முடியாமல் பிராட்டியின் திருவடியிலேயே வந்து விழுந்தது.
பிராட்டியும் காகம் மேல் இரக்கம் கொண்டு அதற்கு உயிர்ப்பிச்சை அளிக்க பெருமாளிடம் வேண்ட, பிராட்டியின் சிபாரிசுக்காக காகத்தைக் கொல்லாமல் அதன் ஒரு கண்ணை மட்டும் அறுத்து உயிர்ப்பிச்சை அளித்தார்.
இந்தப் பாசுர நிகழ்வை விளக்கும் வகையில் இன்றைய சயன சேவை. வேறெங்கும் காணமுடியாத தரிசனம்.
நாச்சியார் திருமொழி
11.தாம் உகக்கும்
திருவரங்கன் மேல் கொண்ட காதல்
பொங்கு ஓதம் சூழ்ந்த* புவனியும் விண் உலகும்*
அங்கு ஆதும் சோராமே* ஆள்கின்ற எம்பெருமான்*
செங்கோல் உடைய* திருவரங்கச் செல்வனார்*
எம் கோல் வளையால்* இடர் தீர்வர் ஆகாதே?* (2) 3
609
மச்சு அணி மாட* மதில் அரங்கர் வாமனனார்*
பச்சைப் பசுந் தேவர்* தாம் பண்டு நீர் ஏற்ற*
பிச்சைக் குறையாகி* என்னுடைய பெய்வளை மேல்*
இச்சை உடையரேல்* இத் தெருவே போதாரே?* 4
610
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.......
அன்புடன்
அனுபிரேம்💚💚💓
தகவல் நன்று. படங்கள் வழமை போல நன்றாக இருக்கின்றன.
ReplyDeleteநன்றி வெங்கட் சார்
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? தங்களின் முந்தய அனைத்து பதிவுக்கும் வர இயலவில்லை. மன்னிக்கவும். இன்று இந்தப்பதிவு சிறப்பாக உள்ளது. படங்கள் அனைத்தும் கண்கொள்ளா காட்சிகள். கோதை ஆண்டாளையும், அவர் மடி மீது, தலை வைத்து சயனித்து பக்தர்களுக்கு அருள் புரியும் ஸ்ரீமன் ரங்கநாதரையும் பக்தியுடன் வணங்கி கொண்டேன். அன்புடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி கமலா அக்கா ...
Deleteநாங்கள் அனைவரும் நலம் ..கடந்த ஆறு மாதங்களாக பையனின் கல்லூரி படிப்புக்கான நுழைவு தேர்வு மற்றும் கல்லூரியில் சேர்வது. கணவரின் பயணங்கள் என்பதால் நேரம் மிக வேகமாக சென்றுவிட்டது, நானும் பதிவுகள் ஏதும் இடவில்லை ...
இனி தொடர்ந்து பதிவுகள் வரும், தாங்களும் வாசித்து உங்களின் கருத்துக்களை தர வேண்டும்.
இந்த சயன திருக்கோலம் எனக்கு மிகவும் பிடித்த கோலம் , இனி வரும் காலங்களில் கோதை நாச்சியார் அருளோடு அனைத்தையும் பகிர அவள் அனுக்கிரகம் செய்ய வேண்டும்