02 April 2017

வானளாவிய கோபுரம்... தஞ்சைப் பெரிய கோயில்( 3)..


வாழ்க வளமுடன்


அனைவருக்கும் வணக்கம்...


முந்தைய பதிவில்   தஞ்சைப் பெரிய கோயிலை.. பற்றியும்,

அழகு நந்தி  பற்றியும் பார்த்தோம்...

இன்று காணப் போவது வானளாவிய உயர்ந்த கோபுரத்தைப் பற்றி.....



தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் 'பெரியகோயில்' என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானத்திற்கு  தக்ஷிணமேரு என்று  பெயர் ....








வானளாவிய கோபுரம்  -

              216 அடி உயரம்... எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம் / விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்.....!





மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160 அடி. இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது


,





எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப்ப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல, சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன.



கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம்.... அங்குள்ள கல்லின் எடை 81 டன்......

இந்த 81 டன் எடையுள்ள கல்லை 216 அடி உயரத்துக்கு எப்படி ஏற்றினர் என்பது  வியத்தகு செய்தி.... தஞ்சைக்கு 9 மைல் தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்து சரிவாக சாரம் கட்டி கற்களை ஏற்றினர் என்பது ஒரு கருத்து. கோபுரத்தைச் சுற்றி மலைப்பாதை போல சுழல் வட்டப் பாதை அமைத்து அதில் கற்களை இழுத்துச் சென்றிருக்கலாம் என்பது இன்னும் ஒரு கருத்து.

என்னே நம் முன்னோர்களின் ஆற்றல்....


thanjavur plan
















இத்தகைய சிறப்பான  கட்டிடத்தை  அழகாக திட்டம் போட்டுக் கட்டியவர்களின்   பெயரையும்  அங்கு  பொறித்து வைத்துள்ளான் ராஜ ராஜன். ..... அவர்கள்

.குஞ்சர மல்லன், ராஜராஜப் பெருந்தச்சன் என்ற இருவர்.













அங்கு உள்ள அருமையான  புல் வெளியில் உண்டு , ஓய்வு எடுக்கும் மக்கள்....

நாங்களும்  இங்கு அமர்ந்து  தீபாவளி பட்சனக்களை உண்டு..ஓய்வு எடுத்தப்பின்னே  சிவனை தரிசிக்க சென்றோம்...



  தொடரும்...



அன்புடன்..

அனுபிரேம்



11 comments:

  1. அழகிய படங்கள் நன்று நன்றி தொடர்கிறேன்.

    கோவிலை கட்டி முடித்ததும் அதை மண் போட்டு மூடி விட்டு சருக்கு பாதை அமைத்து அந்த 81 டன் கனமுள்ள கல்லை கட்டி யானைகளை வைத்து இழுத்து மேலே கொண்டு போய் இருக்கின்றார்கள் இதற்கு உழைத்தது கூலி ஆட்கள் அல்ல நாட்டு மக்கள் அனைவருமே...

    அன்றைய மக்கள் மனித நேயத்துடன் நெறி தவறாமல் வாழ்ந்தவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை..அவர்களின் உழைப்பு இன்று நம் முன்னே வான் உயர் உயர்ந்து நிமிர்ந்து நிற்கின்றது...

      Delete
  2. எங்கள் ஊர் கோயிலைப் பற்றி நீங்கள் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது..

    ReplyDelete
  3. எவ்வளவு பார்த்தாலும் அலுக்காத கட்டடக்கலை.

    ReplyDelete
  4. அருமையான கோயில், கலை வண்னம்,,,பார்க்கப் பார்க்க அலுக்காதவை..,உங்கள் புகைப்படங்கள் அழகு அனு!! அருமை

    கீதா

    கீதா

    ReplyDelete
  5. வியக்க வைக்கும் கட்டிடக்கலை !! எவ்வளவு நுணுக்கமான ஒவ்வொன்றையும் செய்திருப்பார்கள் ஆச்சர்யமா இருக்கு .
    ஊருக்கு போகும்போது தென்னிந்திய ட்ரிப் ஒண்ணு அரேன்ஜ் செஞ்சி இங்கெல்லாம் போகணும் நாங்களும்

    ReplyDelete
  6. அழகிய படங்கள். கட்டிடக்கலை மிகச் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. மிக அருமையான கோயில், ஒருதடவை போய்ப் பார்க்க வேணும்.

    பாரதி வசனங்களில் கலக்கிறீங்க அனு:).. இமேஜை இன்னும் கொஞ்சம் பெரிசாகப் போடலாமே.

    ReplyDelete
  8. அழகிய படங்களுடன் பதிவு அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  9. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டிய படங்கள்
    ஆங்கிலப் பாடத்தின் ஏழாவது பாடம் இது நன்றி

    ReplyDelete
  10. முதலில் அழகான படங்கள்தான் கவர்கின்றன அனு. அதிரா சொன்னமாதிரி பெரிதாக இருந்தால் இன்னும் அழகாயிருக்கும். பெரிய கோவில் தகவல்கள் வாசிக்க ஆச்சரியம்தான். நன்றி அனு.

    ReplyDelete