இனிய காலை வணக்கம்..
திரிசங்குபாகம் - கீதா அக்கா வின் ரெஸிப்பி எங்கள் ப்ளாக் கில் வெளியிட்டார்கள்...
ரொம்ப எளிமையா இருக்கு ன்னு செய்து பார்த்தேன்..
ஆஹா அருமை...செய்யவும் எளிது..
சுவைக்கவும் இனிமை...
அசோகா அல்வா போல் இருந்தது..
நன்றி கீதாக்கா..
தேவையானவை
கடலைமாவு – 1 கப்
பால் – 2 கப்
சர்க்கரை– 1 கப்
நெய் – ¾ - 1 கப்.
முந்திரிப்பருப்பு - 10
ஏலக்காய் பொடி - சிறிது..
செய்முறை..
கடலை மாவை முதலில் வறுக்க வேண்டும் ...அதாவது சிறுது சூடாகும் வரை வறுத்தல் போதும்...
பின் மாவு ஆறியவுடன் அதில் பால் ,சர்க்கரை சேர்த்து கரைக்கவும்..
பின் மிதமான தீ யில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்...
நன்றாக அல்வா பதம் வரும் வரை கிண்ட வேண்டும்..
சிறுது கேசரி பவுடர் சேர்த்தேன் ..நிறத்திற்காக...இப்பொழுது ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளற வேண்டும்..
நெயில் வறுத்த முந்திரியை மேலே தூவலாம்...அல்லது
இந்த முந்திரியை பொடித்தும் கிளரும் போதே சேர்க்கலாம்....
சுவையான திரிசங்குபாகம் இனிப்பு ரெடி...
மிக சுவையான சிற்றுண்டி...
நன்றி எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் சார் மற்றும் கீதாக்கா....👍👍👍👍
அன்புடன்
அனுபிரேம்
செய்து பார்த்து விட்டீர்களா? பகிர்ந்திருப்பதற்கு நன்றி.
ReplyDeleteஅனு சகோ.. இன்றைய எங்கள் கேட்டு வாங்கிப் பொடுகு கதைப் பகுதியில் இருக்கும் படத்துக்கு நீங்களும் பொருத்தமான கதை எழுதலாம். சமீபத்தில் நெஞ்சை வருடும் கதை ஒன்றை எழுதி இருந்தீர்கள். இதுவும் முயற்சிக்கலாமே...
அனு!! சூப்பர் சூப்பர்!!! அனு மிக்க நன்றி செய்து பார்த்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி அனு...நல்லா வந்துருக்கு...
ReplyDeleteகீதா
அழகான படங்களுடன் திரிசங்குபாகம் அருமை.
ReplyDeleteஇந்தா நானும் செய்ய கிளம்பிட்டேன்
ReplyDeleteஅருமை
ReplyDeleteநானும் இதை விடறதில்லை..
ReplyDeleteமிக நல்லா வந்திருக்கே..
ReplyDeleteSuper,will try it !!
ReplyDelete