31 May 2018

பட்டாணி பருப்பு வடை...


இனிய காலை வணக்கம்..


இந்த மாதம் ஒரு இனிப்பு...ஒரு பானகம் எல்லாம் பார்த்தாச்சு..இப்போ காரமா ஒரு வடை...










தேவையானவை..


பட்டாணி பருப்பு - 2 கப்

 வெங்காயம் - 2

பச்சை மிளகாய்   - 2,

காய்ந்த மிளகாய்  - 4,

சோம்பு      - 2 தேக்கரண்டி,

பூண்டு   - 6 பல்,


இஞ்சி - 1 துண்டு,

கறிவேப்பிலை - சிறிது,

கொத்தமல்லி தழை - சிறிது,

ரவை - 3 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - பொரிக்க.















செய்முறை


பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பின்  பருப்பில் உப்பு, இஞ்சி, பூண்டு, சோம்பு, மிளகாய் சேர்த்து, வடைக்கு அரைப்பது போல் கரகரப்பாக அரைக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ,ரவை  அனைத்தையும் சேர்த்து நன்றாக பிரட்டவும்.








வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் மாவை வடைகளாக தட்டி, பொரித்து எடுக்கவும்...வடை ரெடி...







இந்த பட்டாணி பருப்பில் ..வடை சுடும் போது மொறு மொறு ன்னே இருக்கும்..நான் இந்த முறை சிறிது ரவையும் சேர்த்தேன்...


அன்புடன்

அனுபிரேம்...


28 comments:

  1. மேலே போட்டிருக்கும் கடற்கரை படத்தில் ஆருடைய முகம் தெரிகிறது அனு?

    ReplyDelete
    Replies
    1. அதிரா அதில் யாருடைய முகமும் இல்லையே...அப்புறம் இது கடற்கரையில் எடுத்தது இல்ல..அப்புறம் போன ஒரு அருவிக்கரையில் எடுத்தது..

      Delete
    2. விடுங்க அனு அது 61 ஸ்வீட் 61 அதான் டவுட்ஸ் :))))

      Delete
    3. இல்ல அருகிலே ஒரு ஊஞ்சலும் தெரிகிறதே:)) தேவதை ஆரும் வந்து ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கினம் போல ஹா ஹா ஹா..

      Delete
    4. தேவதையா இருங்க தேடி பார்க்கிறேன்..




      Delete
  2. பருப்பு வடைதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பருப்பை அரைக்கக்கூடாது.. கை உரல் இருப்பின் இடித்து எடுத்தால் இன்னும் சுவை. அல்லது நான் செய்வது பாதிப்பருப்பை கரகரப்பாக அரைத்துவிட்டு மீதியை அரைக்காமலே கலந்து விடுவேன்.

    இன்னொன்று பருப்பை 2 நாட்கள் ஊறவிட்டபின் அரைத்துச் சுடும்போது இன்னும் ஒருவித சுவையாக இருக்கும்.

    பட்டாணிப் பருப்பு என்பது கடலைப்பருப்பைத்தானே சொல்றீங்க?

    ReplyDelete
    Replies
    1. இரண்டும் வேற பா...

      உரலில் போட்டு இடித்தால் நல்லாத்தான் இருக்கும்..உரலுக்கு எங்க போவேன்..

      2 நாள் ஊற விடணுமா...ஸ்மெல் வராதா...சொல்லுங்கக் அடுத்த தடவை செஞ்சு பார்க்கலம்...

      Delete
    2. அதிரா உங்க ஊருக்கு ரெண்டு நாள் ஊறவிட்டா ஓகே...எங்க ஊருக்கு ரெண்டுநாள் ஸ்மெல் வரும்...

      அதிரா பட்டாணிப் பருப்பு வேற கடலைப்பருப்பு வேற க ப வில் செய்வதை விட ப ப வில் செய்வது சுவை கூடுதல். உசிலிக்குக் கூட எங்கள் வீட்டில் ப ப சேர்த்துதான் செய்வார்கள். அடைக்கும் கூட ப ப சேர்ப்பார்கள் க ப வுக்குப் பதில்... ப ப சேர்த்த்துச் செய்யப்படும் அடையும் நல்ல டேஸ்டியா இருக்கும்

      கீதா

      Delete
    3. ஓ பட்டாணி வேறையா? பச்சைப் பட்டாணிப்பருப்பு பார்த்ததுண்டு இது கவனிக்கவில்லை. கடலைப்பருப்பைத்தான் 2,3 நாட்கள் ஊறவிடுவேன். அது கீதா டெய்லி நன்கு கழுவி தண்ணி மாத்தி ஊறவிடுவேன் அப்போ மணம் வராது...

      தானியங்களை ஊறப்போட்டாலும் அப்படித்தான் டெய்லி தண்ணி மாற்றி விடுவேன்.. அப்போதுதான் தண்ணி புளிக்காது.

      Delete
    4. ஆமா கீதா க்கா ..இதில் செஞ்சா ரொம்ப டேஸ்டா இருக்கும்..

      Delete
    5. அதிரா...டெய்லி தண்ணி மாத்தி ஊறவிடுவீங்க்களா..

      நானெல்லாம் இரவு ஊற போட்டு காலையில் சமைத்து வேலையை முடித்துவிடுவேன்..

      Delete
  3. வா..வ் பார்க்கவே சூப்பரா இருக்கு. வீக் எண்ட் செய்திடுவோம்..
    பட்டாணி+கடலைபருப்பு 2ம் வேற வேறதானே?அனு

    ReplyDelete
    Replies
    1. ஆமா அம்மு..சாப்பிடவும் நல்லா இருக்கும் ..செஞ்சு பாருங்க...


      ஆமா ப்பா ...பட்டாணிபருப்பும். கடலைபருப்பும் ..வேற வேற....

      Delete
  4. கீதா: அனு எங்கள் ஊரில் பட்டாணிப் பருப்பில்தான் வடையே செய்வார்கள் செம டேஸ்டியா இருக்கும். இங்கு சென்னையில் பட்டாணிப் பருப்பு கிடைப்பது எங்கேனும் ஒரு இடத்தில் பொதுவாகக் கிடைப்பதில்லை. கேரளத்திலும் பட்டாணிப்பருப்பு கிடைக்கும்...அங்கும் இதில் தான் செய்வார்கள்

    நானும் பாதி அரைத்துவிட்டு, பாதி அப்படியே போட்டுச் செய்துவிடுவேன். மற்றபடி எல்லாமே இதே போன்றுதான்...எனக்கு மிகவும் பிடித்த வடை...

    துளசி: பார்க்கவே நன்றாக இருக்கிறதே சகோதரி. எங்கள் ஊரில் பருப்பு வடை என்றாலே இதுதான். உளுந்துவடை உண்டு என்றாலும் பருப்பு வடை அதிகம் செய்வார்கள். வீட்டிலும் செய்தால் இந்தப் பருப்பு வடைதான். நல்ல குறிப்புகள்.

    ReplyDelete
    Replies
    1. திருச்சியில் எங்களுக்கு தெரியாது கீதா க்கா...

      ஆனா மாமியார் வீட்டுக்கு போன பிறக்கு தான் தெரியும் ...ரொம்ப சுவையா இருக்குன்னு கேட்டப்ப தான் அத்தை சொன்னாங்க..

      Delete
  5. வாவ் ! நல்லா மொறு மொறுன்னு இருக்கு ,இது வெள்ளை பட்டாணி தானே அனு .சுண்டல் செய்வோமே ..
    ரவைக்கு பதில் அரிசி ரவை சேர்க்கலாமா ?

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மிஸ்டர் வெள்ளைப்பட்டாணி என்பது பொட்டுக்கடலையையா சொல்றீங்க?..

      Delete
    2. அஞ்சு ..வெள்ளை பட்டாணி வேற இது வேற..

      அது காய வச்ச பட்டாணி...இது பட்டாணி பருப்பு உடைத்தது...

      அரிசி ரவை சேர்த்து பாருங்க .நான் வெறும் ரவை தான் போட்டேன்..

      Delete
    3. அய்யோ அதிரா...

      (வெள்ளைப்பட்டாணி என்பது பொட்டுக்கடலையையா சொல்றீங்க?..)
      இல்ல அதிரா ...அஞ்சு பட்டாணி காஞ்சது சொல்ராங்க..பொட்டுகடலை ய சொல்லல ன்னு நினைக்கிறன்..

      Delete
    4. https://4.imimg.com/data4/HW/CY/MY-8177953/yellow-peas-500x500.jpg

      ஸ்ஸ்ஸ்ஸ் :)
      இதுதான்ப்பா ரகடா பாட்டிஸ் கூட செய்வோம் ..

      Delete
    5. தோலோட ஊரவச்ச பீச் சுண்டல் பட்டாணியை தோலை உரிச்சி இப்டி வரும்

      Delete
  6. எங்க வீட்டில் செய்வதுண்டு அனு. ஆனா நான் செஞ்சா நல்லா வராது.அம்மா செஞ்சா சூப்பரா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அம்மா வீட்டில் செஞ்சது இல்ல ராஜி க்கா....

      இது மாமியார் வீட்டில் செய்வாங்க...அத்தை ரெசிப்பி..

      Delete
  7. அருமை
    ஒரு சிறு கால இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் வலையுலகிற்குத் திரும்பியுள்ளேன்.
    இனி தொடர்வேன்
    நன்றி

    ReplyDelete
  8. பார்க்கும்போதே சுவை நா நரம்பைத் தாக்குகிறது!

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு பார்த்து சொல்லுங்க ஸ்ரீராம் சார்

      Delete