28 June 2018

திற்பரப்பு நீர்வீழ்ச்சி


வாழ்க வளமுடன்...


அடுத்து நாங்கள் சென்ற இடம் திற்பரப்பு நீர்வீழ்ச்சி.


 ‘குமரி குற்றாலம்’ என அழைக்கப்படும் இது நாகர்கோவிலில் இருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோடை காலத்திலும் வற்றாத அருவி.








கோதையார் நதி  நீர் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுகிறது  மற்றும் வருடத்தின் அனைத்து  மாதங்களும் நீர்வீழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.

நீர்வீழ்ச்சியின் மேலே அமைந்துள்ள முழு படுக்கையில் ஆன பாறை  திருபரப்பு 250 மிட்டர் நீளம் கொண்டது.










இங்கு அருவியில் குளிப்பதற்கு  ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனி தனியான தடுப்புகள் உள்ளன ..

மிக அருமையான அனுபவம் ..நீர் மேலிருந்து விழும் போது. பொத் பொத் என யாரோ நீரை தூக்கி அடிப்பது போன்ற அனுபவம்...

அங்கிருந்து வெளியே வரவே மனம் இல்லை..






  குழந்தைகளுக்கான நீச்சல் குளம் ஒன்றும் அருவியின் அருகில் உள்ளது. உடை மாற்ற அறைகளும் உண்டு...








 குமரி மாவட்ட சிவாலய ஓட்டத்தில் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஒன்றான திற்பரப்பு மகாதேவர் ஆலயம் இங்கு உள்ளது.



குமரியிலிருந்து  நாங்கள் பேருந்திலே சென்றோம்...

குமரிலிருந்து ..மார்த்தாண்டம்...அங்கிருந்து குலசேகரம் என பேருந்து மாறி மாறி தான் சென்றோம் .மிக அருமையான பயணம் ...பசுமையான சாலையில்...


இங்கு உள்ளூர் பயணிகளை மட்டுமே காண முடிந்தது...

நீரின் மேல் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் இது...


அதுவும் அருவி குளியல் என்றும் மறக்கமுடியா அனுபவமே..






9 comments:

  1. அருமையான படங்கள். நான் இந்த இடம் போனதில்லை.

    ReplyDelete
  2. அருமையான இடத்தினை அழகாக படம் எடுத்திருக்கீங்க. அழகாக செடியினை வெட்டியிருக்கிறாங்க.

    ReplyDelete
  3. நாகர்கோவிலில் அப்பா வேலைப்பார்க்கும் போது போனது. இப்போது நினைவு இல்லை.உங்கள் படங்களைப் பார்த்தவுடன் கொஞ்சம் நினைவு வருது .
    அழகான அருவி. படங்கள் அழகு.

    ReplyDelete
  4. அனு தண்ணி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கே...முன்ன எல்லாம் சம்மர்ல கூட தண்ணி கொட்டும்..நாங்கள் எத்தனை தடவை குளிச்சுருப்போம்...அப்போ இன்னும் க்ரீனா இருந்துச்சு. இப்படிப் பார்க் எல்லாம் கிடையாது முழுவதும் அப்படியே வெறும் இயற்கையுடன் தான் இருக்கும். தண்ணி கொட்டும் மேல இருந்து ஓடி வரும் ஆறு...ரொம்ப மாறிவிட்டது. இப்படித் திற்பரப்பை நான் இருந்த வரை பார்த்ததே இல்லை...மனசு ரொம்பக் கஷ்டமாகிடுச்சு. இப்ப தண்ணி வரத்து இருக்கும் அங்கெல்லாம் நல்ல மழை கேரளத்தில் நல்ல மழை.

    படங்கள் நல்லாருக்கு அனு

    கீதா

    ReplyDelete
  5. திற்பரப்பா இது? ஆச்சரியம். நான் நாகர்கோவிலில் படித்தவரை போயிருந்த சமயத்தில் இது இப்ப்டி ஒல்லியாகப் பார்த்ததே இல்லை. என்னவெல்லாமோ வந்திருக்கிறது போல. கோயில் ரொம்ப அழகா இருக்கும் சிவன் கோயில். இன்னும் இயற்கையுடன் இருந்த இடமாகத்தான் என் மனதில் இருக்கிறது.

    துளசிதரன்

    ReplyDelete
  6. ஆவ்வ்வ் சூப்பராக இருக்கு.. சின்ன நீர்வீழ்ச்சி ஆனா பெரிய அழகு.. அருகில் பச்சைப் பசேலென அழகாகப் பராமரிக்கிறார்கள். ஆனா அங்கு எங்கு பார்த்தாலும் சனத்திரளாக இருக்குமே.. இதில் அப்படித் தெரியவில்லை.

    ReplyDelete
  7. அழகான இடம். படங்கள் அழகு.

    ReplyDelete
  8. திற்பரப்பு கேள்விப்பட்டிருக்கின்றேன்...

    தங்கள் படங்கள் அதன் அழகைக் காட்டுகின்றன...

    ReplyDelete
  9. பல ஆண்டுகளுக்கு முன் சில முறைகள் சென்றிருக்கிறேன். மிக அருமையான இடம்.

    ReplyDelete