21 May 2019

சின்ன சின்ன மழைத் துளிகள்

வாழ்க வளமுடன் 





சின்ன சின்ன மழைத் துளிகள் 
படம்: என் சுவாச காற்றே


ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி சிறு துளி மழை துளி
பட பட பட பட படவென சிதறுதே






சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ

நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ

நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமா -நான் 
சக்கரவாக பறவையாவேனோ

மழையின் தாரைகள் வைர விழுதுகள் 
விழுதை பிடித்து விண்ணில் சேர்வேனோ


சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ




ஒரு பூவினிலே விழுந்தாய் ஒரு தேன் துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தாய் ஒரு முத்தெனவே முதிர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தாய் நவதானியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்வாய்

அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய shower இது

அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது

இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது


சக்கரவாகமோ மழையை அருந்துமா நான் 
சக்கரவாக பறவையாவேனோ

மழையின் தாரைகள் வைர விழுதுகள் 
விழுதை பிடித்து விண்ணில் சேர்வேனோ







மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கருப்பு கொடி காட்டியாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு யாரும் திரும்பி கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடி கரையும் போது
 மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

நீ கண்கள் மூடி கரையும் போது 
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்



சக்கரவாகமோ மழையை அருந்துமா நான்
 சக்கரவாக பறவையாவேனோ

மழையின் தாரைகள் வைர விழுதுகள் 
விழுதை பிடித்து விண்ணில் சேர்வேனோ




 சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ

நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ

நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ




கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்பும்  போது வரவேற்ற மழைத்துளிகள் .....



அன்புடன்
அனுபிரேம்




13 comments:

  1. மழை உங்களை வரவேற்றது மகிழ்ச்சி.
    மழை வேண்டும்.
    மழை துளி முத்துக்களை கோர்த்து மாலையாக வருணபகவானுக்கு போடுவோம்.
    பாடல் பகிர்வும் படங்களும் அருமை.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    சின்ன சின்ன மழைத்துளிகள் சில்லென்ற காற்றுடன் தங்களை வரவேற்ற அழகை சுவைபடச் சொல்லியதை ரசித்தேன்.

    /ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
    ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
    ஒரு துளி இரு துளி சிறு துளி மழை துளி
    பட பட பட பட படவென சிதறுதே/

    பாடலும் அருமை. அழகிய மழைத்தூறலும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அழகிய கருத்திற்கு நன்றி மா

      Delete
  3. எனக்கு மிக மிகப் பிடித்த பாடலோடு அழகிய மழைத்துளிகள்.. ஆனா ஏன் எல்லாப் படமும் ஒரேவிதமாக குளோஸப்பில் எடுத்திட்டீங்க...

    பாரதியார் கவியும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வரும் போது காரில் அமர்ந்து எடுத்தவை அதிரா ....அதிலும் படம் எடுக்க எடுக்க ஆனந்தமாகவும் இருந்ததால் நிறைய எடுத்துவிட்டேன் ...

      Delete
  4. அனு படனள் கார் கண்ணாடி இல்லையா நல்லாருக்கு...

    பாடல் வரிகளும் ரொம்ப நல்லாருக்கு இந்தப் பாட்டு கேட்டதில்லை. இப்பத்தான் யூட்யூப்ல கேட்கிறேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்ல பாட்டு கீதா க்கா ...கேட்டு பாருங்க

      Delete
  5. கதவடைக்க வேண்டாம், குடை பிடித்து கருப்புக் கொடி காட்டவேண்டாம்வரிகள் எப்போதுமே நான் ரசிப்பவை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்...ஸ்ரீராம் சார் அருமையான வரிகள் அவை ...

      Delete
  6. பாட்டும்,படமும் அருமை,அழகு. எனக்கும் இப்பாடல் பிடிக்கும். மழையென்றால் நனைய ஆசை.நனைந்தும் இருக்கிறேன். நிறைய பாடல் ஞாபகத்துக்கு வரும். ஆனா இப்ப மழை இங்கு வேண்டாமே. பிடித்தமான மழையை வெறுத்துவிடுவேனோ எனுமளவு கொட்டி தீர்த்துவிட்டது.
    இன்றுதான் நல்ல வெயில் இங்கு.

    ReplyDelete