31 May 2019

குல்பி ஐஸ்.....


வாழ்க வளமுடன் 


குளிர்ச்சியான பதிவு இன்று ...  குல்பி ஐஸ்.....



இந்த குல்பி செய்யணும்ன்னு ரொம்ப நாள் ஆசை ...போன வருடம் இந்த mould கிடைக்கலை ..சரி பரவாயில்லை ன்னு கப் ல எல்லாம் வச்சு செஞ்சேன் ...



இந்த வருடம் விடுமுறையில் ஊருக்குப் போன போது குல்பி mould அழகான வண்ணத்தில் கிடைத்தது...சரி ன்னு சந்தோசமா செஞ்சா இரண்டு முறை சொதப்பல் ...அப்போ தான் அதிரா வின் ஐஸ் பதிவு வந்தது. அதனால் விடாமல் முயன்றதில் சுவையான குல்பி கிடைத்தது ...





தேவையானவை 


கொழுப்பு நிறைந்த பால்      –1/ 2 லிட்டர்

முந்திரி – 10
பாதாம் – 1௦
பிஸ்தா – 10

சர்க்கரை  – 5 ஸ்பூன் 
MTR பாதாம்பால் பவுடர் - 4 ஸ்பூன் 






செய்முறை -




முதலில்  பாலை கொஞ்சம் சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும்.


பாதாம், பிஸ்தா, முந்திரியை  பிசிறாக அரைத்து பின் அதில்  சர்க்கரை , மற்றும்  பாதாம் பால் பவுடர்   சேர்த்து  அரைத்துக் கொள்ளவும்.










அரைத்தவற்றை பாலில் கலந்து கொதிக்க வைக்கவும் ....







 பால் நன்கு  ஆறவும் குல்பி mould ல் ஊற்றி ...குளிர்சாதனப் பெட்டியில் இரவு முழுவதும் வைக்கவும் ....














காலையில் சுவையான குல்பி ரெடி ...













இதில் முந்திரியை ரொம்ப அரைக்காமல் சேர்த்ததால் ...அந்த தூள்கள் எல்லாம் வரும் போது ரொம்ப நல்லா இருந்தது ....

MTR பாதாம்பால் பவுடர் இல்லாமலும் இது போல் செய்யலாம்...என்னிடம் இருந்ததால் நான் சேர்த்து செய்தேன் ...





அன்புடன் 
அனுபிரேம் 



5 comments:

  1. ஐஸ் படங்கள் ஆசையை தூண்டுகிறது

    ReplyDelete
  2. ஆஆஆஆஆவ்வ்வ்வ் அனு.. நானும் குல்ஃபி செய்யப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. பார்க்கவே ஆசையாக இருக்கு.

    ReplyDelete
  3. சூப்பரா இருக்கு குல்பி. எனக்கு இது செய்யனும் என்று ஆசை. உங்ககுறிப்பின் படி செய்துபார்த்திடவேண்டியதுதான். பாதாம்பால் பவுடர் இல்லாமல் செய்யலாம் என்பது போனஸ் தகவல். (இங்கு கிடைக்குமா தெரியல.)

    ReplyDelete
  4. ஹையோ செமையா இருக்கு அனு!! குல்ஃபி...பார்க்கவே அழகு!!! ரொம்ப நல்லாருக்கு....பார்சல்! ஆனா கரையாம வரணும் ஹா ஹா ஹா ஹா

    அனு இதுல இன்னும் நிறைய ஃப்ளேவர் போட்டு செய்யுங்க. நான் எம் டி ஆர் பாதாம் பவுடர் சேர்த்ததில்லை..ஏலக்காய் குங்குமப்பூ பொடி அப்புறம் குங்குமப்பு இல்லாமல், அப்புறம் கேசர் பவுடர், எல்லாம் போட்டு மில்க் பவுடரும் கொஞ்சம் சேர்த்தா இன்னும் நல்ல பைண்டிங்கா திக்கா வரும்னு.

    அப்புறம் பருப்புகள் இதெ போட்டு கொஞ்சம் சேமியாவும் வேகவைத்துப் போட்டு குல்ஃபி.

    சாக்கோ குல்ஃபி அதில் கேஷ்யூ பாதாம் அரைத்துப் போடுவேன் கூடவே சாக்கோ சிப்ஸ் போட்டு குல்ஃபி. சூப்பரா இருக்கும். பருப்பு அரைத்துவிட்டு ஃப்ளேவர் மாற்றி செய்யலாம்...பலாப்பழ குல்ஃபி, மாங்கோ குல்ஃபி என்று...ஆனால் இதில் கேஸர்/குங்குமப்பூ சேர்க்கக் கூடாது. சேர்த்தா பழ ஃப்ளேவர் தெரியாது....

    தேங்காய்ப்பால் பருப்புகள் ப்ளஸ் கொஞ்சம் தேங்காயும் அரைத்துவிட்டு குல்ஃபி!!!! தேங்காய்ப்பால் திக் பால் மட்டும் தான்....செஞ்சு பாருங்க செமையா இருக்கும்...

    கீதா

    ReplyDelete