13 January 2018

ஆண்டாள் திருவடிகளே சரணம்...


ஆண்டாள் வாழித்திருநாமம்












ஆண்டாள் திருவடிகளே சரணம்...

போன வருடம் பல பதிவுகளில்  திருப்பாவையை வாசிக்கும் போது நாமும் இது போல் பதிவிட வேண்டும் என ஆசை வந்தது...


தினமும் பதிவிட இயலுமா...ஏதும் பிழை இல்லாமல் செய்ய முடியுமா என பல ஐயங்கள்...


சரி ஐந்து ஐந்தாக பதிவிடலாம் என நினைத்தேன்...

பின் படங்களோடு இருந்தால் நலம் என தேடினேன்...

அப்பொழுது ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை படங்கள் கிடைத்தன...

இன்றும் தினமும் ஸ்ரீரெங்கம் ஆண்டாள் சன்னதியில்  பாசுரங்களுக்கு ஏத்த அலங்காரம் செய்கிறார்கள்..ஆனால் படம் எடுக்க அனுமதி இல்லை

நானும் இரு தினம் சென்று சேவிக்கும் பாக்கியம் பெற்றேன்...

பின் அவ்வழகிய படங்க
ளுடன் ஆண்டாளின் அனுகிரகத்தால் தினமும் பாசுரங்களை பதிவிடும் பாக்கியம் பெற்றேன்...



தொடர்ந்து இங்கு வந்து சேவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...


தொடர்ந்து  எல்லா பதிவுகளுக்கும் ஊக்கம் அளித்த

 திரு.துரை செல்வராஜூ (thanjavur14.blogspot.in) ,
 திரு.கரந்தை ஜெயக்குமார் ( karanthaijayakumar.blogspot.com )
 திரு.வெங்கட் நாகராஜ் (venkatnagaraj.blogspot.in)
 திரு.பாண்டியன் சுப்பிரமணியன் ( pandiansubramaniam.blogspot.in)


மற்றும்

அனைவருக்கும்..

 எனது பணிவான வணக்கங்களும் நன்றிகளும்......


ஆண்டாள் திருவடிகளே சரணம்...










அன்புடன்

அனுபிரேம்




4 comments:

  1. ஆண்டாளின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கட்டும் அனு..
    உண்மையில் கண்ணாடி சேவை படங்கள் மிக அழகு. அத்தனை படங்களையும் பார்வைக்கு தந்து, பாசுரங்களையும் பதிவிட்டமைக்கும் வாழ்த்துக்கள்.
    இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அழகிய படங்களுடன் திருப்பாசுரங்களை வழங்கிய தங்களுடைய பணி சிறப்பானது..

    அப்புறம் -
    திரு அரங்கத்தில் கண்ணாடி அறையிலுள்ள கோலங்களைப் படமெடுக்க அனுமதி உண்டா?.. யாரிடம் அனுமதி பெறுவது?... விவரம் தெரிவிக்கவும்..

    ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு மிகவும் நன்றி....

      நான் இந்த முறை சென்ற போது திருவரங்கத்தில் கண்ணாடி அறையிலுள்ள கோலங்களைப் படமெடுக்க அனுமதி உண்டா என அங்கிருந்த குருக்களை கேட்டேன்...அவர் அதற்கு அனுமதி இல்லை என கூறினார்...

      மேலும் அனுமதி பெறுவது பற்றிய விவரங்கள் எனக்கும் தெரியாது...
      நாம் கோவில் அலுவலகத்தில் தொடர்பு கொண்டால் மேலும் தகவல்கள் கிடைக்கும்...

      Delete
  3. படங்கள் ரொம்ப அழகு அனு! கோதை நாயகியின் அருள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்றும் எப்போது உண்டாகட்டும்....

    கீதா

    இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    துளசி, கீதா

    ReplyDelete