மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது.
அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய்.
வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் ? என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
அன்புடன்
அனுபிரேம்
அனு ஒவ்வொரு திருப்பாவை படங்களும் கண்ணாடி சேவை படங்களும் ரொம்ப நல்லாருக்கு..நான் எல்லா பதிவுகளும் பார்த்தேன்...கருத்து எல்லாத்துக்கும் போடலை....
ReplyDeleteநேற்றைய பாடல் ரொம்பப் பிடித்த பாடல் அங்கண்மா ஞாலத்து...இன்றைய பாடல் அதன் தொடர்ச்சியான பொருளில் வரும் பாடல்...
கீதா
இன்றைய பாசுரமும் படங்களும் சிறப்பு. தொடர்கிறேன்.
ReplyDeleteநன்றி.
ReplyDelete