முருகா சரணம்...
கந்தா சரணம்.....
இன்று தைப்பூசம் நன்னாள்....
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி,
முருகன் கையில் வீரவேலை ஏந்திய நாளே தைப்பூசம் ....
முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் . 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் .
தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக கொண்டாடப் படுகின்றது.
தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும்.
அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
25/1/1872 அன்று தைப்பூச நாளில் முதல் முறையாக ஜோதி வழிபாட்டை வடலூரில் தொடங்கி வைத்தார் வள்ளலார் . அதன்பின் அந்த ஜோதியிலேயே ஐக்கியமானார்.
அன்று முதல் இன்று வரை தைப்பூச தினத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி ஜோதி தரிசனம் செய்கிறார்கள்.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்குகிறோம்.
தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கிறோம்.
ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.
Add caption |
தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு.
பூச நட்சத்திர நாள் காவடி பிரியன் கந்தனுக்கு மிகவும் விசேஷமான நாள்.
இந்நாளில்தான் முருகப் பெருமான் வள்ளியை மணமுடித்தார்.
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில் (எனக்கும்
கார்த்திகை விளக்கு பெண்களுடன்-திரு
காவடி சுமக்கும் தொண்டருடன்
தினம் கூப்பிடும் ஞானமலர்களுடன்-ஒரு
புல்லாய் முளைத்து தடுமாறும் (எனக்கும்
நேற்றைய வாழ்வு அலங்கோலம்-அருள்
நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்
வரும் காற்றில் அணையா சுடர்போலும்-இனி
கந்தன் தருவான் எதிர்காலம் (எனக்கும்)
ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
நான் உள்ளம் எனும் தோகையினால் கந்தன்
உறவு கண்டேன் ஆசையினால் கந்தன்
உறவு கண்டேன் ஆசையினால் (எனக்கும்
முருகா சரணம்...
கந்தா சரணம்.....
வடிவேலா சரணம்.....
அன்புடன்
அனுபிரேம்.....
முருகன் என்றாலே அழகு. படங்களும் அழகு.
ReplyDeleteஇன்று காலையில் கூட TMS அவர்கள் பாடிய இந்தப் பாடலைத் தான் கேட்டுக் கொண்டிருந்தேன்..
ReplyDeleteமுருகா.. முருகா...
முருகனை எனக்கும் பிடிக்கும் ஏன் என்றும் அவன் அப்பாவித்தனம் பற்றியும் எழுதி இருக்கிறேன் ஒரு பதிவின் சுட்டி தருகிறேன் http://gmbat1649.blogspot.com/2016/10/blog-post_19.html
ReplyDeleteஅழகான படங்கள். எங்க வீட்டருகிலும் முருகன் கோவில் இருக்கு. தைப்பூசம் வெகு சிறப்பாக நடக்கும். டி.எம்.எஸ் ந் இப்பாடல் மறக்கமுடியாது. அருமையான பகிர்வு அனு.
ReplyDeleteவணக்கம் அனு!
ReplyDeleteமுருகன் என்றாலே உடனே சொல்ல வருவது அழகன்தான்!
அருமையான படங்கள்! TMS பாடிய பாடலை நினைவுபடுத்தினீர்கள்!
அதுவும் உன்னதமான ஒரு பாடல்! உளம் நிறைந்தது!
நன்றியுடன் வாழ்த்துக்கள் அனு!
அருமை
ReplyDeleteதைப்பூசத்தில் முருகன். அருமை.
ReplyDeleteதைப் பூச சிறப்பு பதிவு அருமையான பாடலுடன் அருமை.
ReplyDelete