முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....
அன்புடன்
அனுபிரேம்
நன்றி.
ReplyDeleteசூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் போற்றி..
ReplyDeleteதரிசித்தேன் நன்று நன்றி.
ReplyDeleteபகவான் கண்ணனின் சிறந்த குணங்களையும் நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கும் உன்னத பாசுரம்.
ReplyDeleteதரிசனம் பெற்றேன்.
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteநன்றி.
ReplyDelete